எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன் பழகன் அவர்கள் தருமபுரியில் நடைபெற்ற ஓர் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் சற்றும் கூச்சமின்றிப் பங்கேற்றுள்ளார் (13.5.2017).

‘நான் தருமபுரியைச் சேர்ந்தவன் என்பதால் துப்புரவுப் பணிகளைத் தொடங்கி வைக்க என்னை அழைத்தனர். நல்ல பணியை மேற்கொண்டதால் ஆர்.எஸ்.எஸ்.காரர்களை ஊக்குவிப்பது அவசியமாகிறது’ என்று தனது செயலுக்கு நியாயத்தையும் கற்பிக்க முயன்றுள்ளார்.

இவர்கள் கூட்டித்தான் ஊர் சுத்தமாகப் போகிறதா? அ.தி.மு.க. ஆட்சி நிர்வாகம் சரியாக இருந்தால் ஊரெல்லாம் சுத்தமாகத்தானிருக்கும்.

ஆர்.எஸ்.எஸின் தந்திரங்கள் உலகப் புகழ்பெற்றவை. இதுபோன்ற பணிகளில் அவர்கள் ஈடுபடுவதுபோல காட்டிக் கொள்வதெல்லாம் ஒரு நயவஞ்சக நாடகம் என்பது அவர்களின் கோட்பாடுகள் குறித்தும், கடந்தகால நடவடிக்கைகள் குறித்தும் அறிந்தவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.

குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டபோது கூட இப்படித்தான் ‘பொது சேவைகளில்’ ஈடுபட்டனர்; அரசு தரும் பொருள் களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியதில்கூட ஜாதிப் பாகுபாடு பார்த்தவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்ற உண்மை தெரியுமா?

தீண்டாமையைஆதரிக்கக்கூடியவர்கள்,ஜாதி கட்டமைப்புஎன்றைக்கும்இருக்கவேண்டும்என்று சொல்லக்கூடியவர்கள். மாட்டுக்காகத் தான் கவலைப்படு வோம் - மனிதருக்கல்ல என்று விவேகானந்தரிடம் கூறி, அவரிடம் நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டவர்கள். (‘அட மாட்டுக்குப் பிறந்த மடையர்களா!’ என்று கேட்டவர் விவேகானந்தர்) தெருக்களைக் கூட்ட முன்வருகிறார்கள் என்றால், அதன் பொருள் என்ன? ஓர் அமைச்சராக இருக் கக்கூடியவரேஏமாறுகிறார் என்பதிலிருந்து ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் நோக்கம் நிறைவேறுகிறது என்பது வெளிப்படை. அண்ணாவின் மொழியில் சொல்ல வேண் டும் என்றால், குஷ்ட ரோகிகளின் கையில் இருக்கும் வெண்புட்டு!

ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களை காந்தியார் பார்த்துப் பாராட்டினார், ஜெயபிரகாஷ் பார்த்துப் பாராட்டினார், அம்பேத்கர் பார்த்து அசந்து போனார் என்றெல்லாம் பொல் லாப் புனைகளை அவிழ்த்துவிட்டு நாட்டு மக்கள் மனதில் இடம்பிடிப்பது எல்லாம் எப்பொழுதோ அம்பலமாகி விட்ட பழைய கதையாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அவர்கள் காலூன்ற விரும்புவதால் இதுபோன்ற செல்லரித்துப் போன பழைய யுக்திகளைக் கையாள்கிறார்கள். இதைக்கூட ஒரு உயர்கல்வித் துறை அமைச்சர் புரிந்துகொள்ளவில்லையா? அல்லது அவர்கள் கட்சி - ஆட்சி இப்பொழுது எடுத்தி ருக்கும் பா.ஜ.க.வை அண்டிப் பிழைக்கும் அரசியல் தனத்துக்காக அடிபணிந்து போகவேண்டிய அவசியமா? என்பதுதான் இப்பொழுது எழுந்துள்ள அரிய வினாவாகும்.

சில நாள்களுக்குமுன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ‘மத்திய பி.ஜே.பி. அரசை விமர்சிக்க வேண்டாம்‘ என்று தம் சகாக்களுக்குச் சொன்னதன் தொடர்ச்சியாகவே இதனைக் கருதவேண்டியுள்ளது.

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை இரு அணிகளுக் கிடையே ‘ஏடா கூடா’ இழுபறிகளும், தாக்குதல்களும் தொடர்ந்து நடந்துகொண்டு இருந்தாலும், பி.ஜே.பி.யைக் கட்டித் தழுவுவதில் மட்டும் ஒருமித்த கருத்தில் கட்டுண்டுக் கிடப்பதுதான் வேடிக்கை.

திருத்துறைப்பூண்டி பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சொன் னதுபோல, மடியில் கனங்கள் இருக்கின்றன என்பதற்காக, பெரியார், அண்ணா உருவாக்கி வைத்துள்ள அடிப்படைத் தத்துவங்களுக்கு (கட்சியிலும், கொடியிலும் அண்ணா சுவ ரொட்டிகளில், பெரியார், அண்ணா படங்கள்) விரோதமாக தங்களை முற்றிலும் தொலைத்துக் கொண்டு விடலாமா?

இந்தியா முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிராக அவர்கள் நடத்தும் அட்டூழியங்களை அமைச்சர்கள் அறியமாட்டார்களா?

தமிழ்நாட்டில் சிறுபான்மையின மக்கள் என்று தனித்துப் பார்க்கப்படாமல், சகோதரத்துவத்துடன் அன்றாடம் பழகி வாழ்ந்து வரும் நிலையில், அதற்கு ஊறுவிளைவிக்கும் ஒரு பாசிச அமைப்புக்குத் தோள் கொடுக்க முனைந்தால், அதன் பாரதூர விளைவுகளை அ.தி.மு.க.கூட அனுபவிக்க நேரிடும் என்பதை மறந்துவிடலாமா? சிறுபான்மை மக்கள் அ.தி.மு.க.வைப்பற்றி எப்படி எடை போடுவார்கள் என்பதுபற்றி எண்ணிப் பார்த்ததுண்டா?

முதல்வராக ஜெயலலிதா இருந்த நிலையில், நாமக் கல்லில் 2014 ஆம் ஆண்டில் தடையை மீறி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்தியபோது, அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டனரே! அதே நாமக்கல்லில் கடந்த 13 ஆம் தேதி காவல்துறை அனுமதியுடன், துணையுடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தப்பட்டது எப்படி?

எதற்கெடுத்தாலும் ‘அம்மா, அம்மா’ என்று அடிக்கு ஒரு தடவை பஜனைபோல, மந்திரம்போல, முழங்கும் முணுமுணுக்கும் அமைச்சர்கள், இந்த விடயத்தில் அந்த அம்மா கடைபிடித்த கண்ணோட்டத்தைக் கைகழுவியது ஏன்? மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்பது அமைச்சர்களுக்குத் தெரியாதா?

டில்லி சென்ற முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களி டத்தில் (மண்டைக்காடு கலவரம் தொடர்பாக) ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வன்முறைக் குணத்துடன் நடந்துகொண்ட தகவல் தெரியுமா? வேண்டும் என்றால் மேனாள் அமைச்சர் பண்ருட்டி எஸ்.இராமச்சந்திரன் அவர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

வேண்டாம் இந்த விபரீதப் புத்தி!

அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்களே, பாம்புப் புற்றில் கை வைக்க ஆசைப்படாதீர்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner