எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பி.ஜே.பி.யின் இரண்டு நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் ஒடிசா தலைநகர் புவனேசுவரத்தில் தொடங் கியது. அக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமித்ஷா பேசுகையில்,

‘‘நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றபோது, இது இறுதி வாய்ப்பு, இதோடு பாஜக முடிந்துவிடும் என்றார்கள். ஆனால், அதோடு நிற்காமல் நாம் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று வருகிறோம். இந்திய நாட்டில் மேற்கிலும், மத்திய பகுதிகளிலும் நாம் பெற்ற வெற்றிகளோடு, கிழக்கில் அசாமிலும், மணிப்பூரிலும் நடந்த தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். தற்போது தெற்கிலும், கிழக்கிலும் வெற்றி நமக்காக காத்திருக்கிறது. அதற்கு நாம், உழைத்துக் கொண்டே இருக்கவேண்டும். இப்போது 13 மாநிலங்களில் நமது ஆட்சி நடக்கிறது. இன்னும் நாம் நிறைய வெற்றிகளை பெற வேண்டியது இருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் நமது கொடி பறக்கவேண்டும்.

சென்ற ஆண்டு தேசிய செயற்குழு கூட்டத்தில் உத்தரப்பிரதேசம்  உட்பட அய்ந்து மாநிலத் தேர்தல் களைப்பற்றி தீர்மானம் எடுத்தோம். அதை ஓரளவுக்கு செய்தும் இருக்கிறோம்.  இப்போது, அடுத்து நடக்க விருக்கும் இமாச்சலப் பிரதேசம், குஜராத் மற்றும் கர்நாடக  சட்டமன்றங்களுக்கு நடக்கும் தேர்தல்களிலும் இதே போன்ற தீர்மானத்துடன் வேலைசெய்ய வேண்டும். இவ்வளவு எண்ணிக்கையில் நமது முதல்வர்கள் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பது இதுவே முதல்முறை.

வரும் செப்டம்பருக்குள் தேர்தல் வர இருக்கும் மாநிலங்களில் உள்ள கட்சியினரை சந்திக்க 95 நாள்கள் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறேன்.  கட்சியின் மூத்தத் தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் மாதத்தில் 15 நாள்களை தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் மற்றும் ஒடிசா போன்ற பி.ஜே.பி பலம் குறைவாக இருக்கும் மாநிலங்களில் செலவிடவேண்டும். தேசிய செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், வாக்குச்சாவடி அளவில் உள்ள நிர்வாகிகளை சந்தித்து கட்சியை பலப்படுத்தும் வேலைகளை செய்ய வேண்டும்.

தேசியக்கட்சியானகாங்கிரசைநாம்விரட்டி விட்டோம். இப்போது நமது அடுத்த இலக்கு மாநிலக் கட்சிகளை வீழ்த்துவதுதான்! உத்தரப்பிரதேசத்தில் இதைவெற்றிகரமாகநிகழ்த்திக்காட்டிவிட்டோம்.மாயாவதி, அகிலேஷ் கணக்குகள் அனைத்தையும் முடித்துவிட்டோம், இடது சாரிகளை தோற்கடிப்பது என்பதுநமக்குமிகவும்எளிதானவேலை.அதைவிரைவில்கேரளாவிலும்,திரிபுராவிலும்செய்து முடிப்போம், அதற்கான வேலைகளைத் துவங்கிவிட் டோம்.

ஒடிசாவில் உள்ளாட்சித் தேர்தல்களில் நாம் பெற்ற பிரமாண்ட வெற்றி ஒடிசாவில் நாம் வளர்ந்துவிட்டதைக் குறிக்கிறது. விரைவில் இங்கே நமது முதல்வர் ஒருவர் பதவியில் இருப்பார். நாம் நாடாளுமன்றத்தில் அறுதிப்பெரும்பாண்மை பெற்றுவிட்டோம்,  உத்தரப் பிரதேசத்திலும் மகத்தான வெற்றியை பெற்றுவிட்டோம்.

இது தீனதயாள் உபாத்யாவின் நூற்றாண்டு விழா. டில்லியில் கடந்த முறை நடந்த, தேசிய செயற்குழு கூட்டத்தில் கட்சி பணியாற்ற முழு அர்ப்பணிப்புடைய சேவகர்கள் தேவை என்று அழைப்பு விடுத்து இருந் தோம். அதன்படி 2,470 பேர் ஓராண்டு முழு நேர ஊழியர்களாகவும், 1,441 பேர் ஆறு மாதத்திற்கும், 3,78,000 பேர் 15 நாள்களுக்கு பணி செய்யவும் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை பி.ஜே.பி ஆட்சி செய்யும் பொற்காலம் மலர இருக்கிறது.

மேற்கு வங்கம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பலம் பெறுவதற்கு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளோம், அதை நடைமுறைப் படுத்திவருகிறோம். நமது வெற்றி யைப் பற்றி இந்த இரண்டு மாநிலங்களிலும் அதிகம் பிரச்சாரம் செய்யவேண்டும். அரசியல் தளத்திலும் மக்களிடத்திலும் நமது கொள்கைகளை மேலும் தீவிரமாக எடுத்துச் செல்லவேண்டும். இறுதி நாள் விழாவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற விருக்கிறோம். அதில் தமிழகம் பற்றி பல்வேறு முக்கிய கட்டளைகளை கொடுக்கவிருக்கிறோம்‘’ என்று கூறியுள்ளார்.

இதில் கூறப்பட்டுள்ள பல தகவல்கள் உண்மைதான். அதிகாரம், பண பலம், பத்திரிகை பலம் இவற்றை வலுவாகக் கொண்டு பி.ஜே.பி. செயல்பட்டுக் கொண்டிருக் கிறது என்றாலும், தமிழ்நாட்டின் மண்ணுக்கென்று சில தனித்த குணங்கள் (Soil Psychology)
உண்டு.

அந்தப் பலத்தின்மீது நின்று மதச்சார்பற்ற சக்திகள் மதவாத சக்திகளுக்குத் தமிழ்நாட்டில் கொடுக்கும் மரண அடி என்பது வேறு எங்கும் எழுந்திருக்கவே முடியாத நிலையை ஏற்படுத்தவேண்டும்.

திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிகள், சமூக அமைப்புகள் அடங்கிய கூட்டத்தில், மதச்சார்பின்மை, சமூகநீதி, மாநில உரிமைகள் இவற்றை மய்யப்படுத்தி மதவாதப் பிற்போக்குச் சக்திகளை மண்ணும் மண்ணடி வேரும் இல்லாமல் கெல்லி எறிய முடிவு செய்யப்பட்டது (27.3.2017).

அமித்ஷா தன் படையொடு வரட்டும் - அதனை முறியடிக்கும் ஆற்றல் நிச்சயம் தமிழ் மண்ணுக்கு உண்டு உண்டு என்பதை அறுதியிட்டு உறுதியாகவே தெரிவித்துக் கொள்வோம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner