எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திட்டக் கமிசனுக்கு மோடி தலைமைப் பொறுப்பை ஏற்றவு டன் நிதி ஆயோக் என்று மாற்றப்பட்டது. இந்த நிதி ஆயோக் தற்போது தனியார் மயமாகிக்கொண்டிருக்கிறது.  இதன் ஒரு பகுதியாக நிதி ஆயோக்கின் அதிகாரிகளை தனியார் நிறுவனங் களில் இருந்து பணியமர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு நாட்டின் வளர்ச்சியை மய்ய மாகக் கொண்டு திட்டங்கள் தீட்டுவதற்கு, அதற்குத் தேவையான நிதியை ஒதுக்குவது மற்றும் பேரிடர் காலத்தின் போது நிதிப் பயன்பாடு, பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு போன்ற நிதி தொடர்பான பல்வேறு பணிகளை திட்டக் கமிசன் மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸ் கொண்டு வந்தது என்ற ஒரே காரணத்திற்காக திட்டக்கமிசனை கலைத்து ‘‘நிதி ஆயோக்'' என்ற ஒன்றை உருவாக்கினார்.

திட்ட ஆலோசனைக் குழு என்பது ‘‘பிளானிங் கமிசன்’’ என்று ஆங்கிலத்தில் வழங்கப்பட்டது. இந்தியிலும் இதற்கு ‘‘யோஜனா ஆயோக்‘’ என்று பெயர் இருந்தது. ஆனால், மோடி சமஸ்கிருத பெயரான நிதி ஆயோக் என்று பெயர் வைத்தார். இதை மொழி பெயர்க்காமல் ‘‘நிதி ஆயோக்‘’ என்றே ஆங்கிலம் மற்றும் இதர இந்திய மொழிகளில் அப்படியே பயன்படுத்தி வருகிறது மத்திய அரசு.

2014 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் பேசிய மோடி இந்தியாவின் திட்டக்குழு என்பது மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கவில்லை, ஆகவே நேரு கொண்டுவந்த திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கும் ‘‘நிதி ஆயோக்‘’உருவாக்கப்படும் என்று விளக்கம் அளித்தார். அவர் கூறியது போலவே 2015 ஆம் ஆண்டு அவசர அவசரமாக தானே தலைவராகவும், தனக்குக் கீழே அய்ந்து செயலாளர்களைக் கொண்டதாகவும் ‘‘நிதி ஆயோக்‘’ உருவாக்கப்பட்டது.

இந்தக் குழு ஆரம்பித்து 2 ஆண்டுகள் கழித்தும் இதுவரை பெயர் சொல்லக்கூடிய ஒரு திட்டத்தைக் கூட முன் வைக்கவுமில்லை, இதன் செயல்பாடுகள் பெருத்த சர்ச்சைகளைக் கிளப்பின. 2015-2016 ஆம் ஆண்டுகளில் ‘‘நிதி ஆயோக்‘’ கூட்டங்கள் பெயரளவிற்குக்கூட கூட்டப்படவில்லை. ஆனால், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயாக்குவதில் ‘‘நிதி ஆயோக்‘’ அதிக முனைப்பு காட்டிவருகிறது. முக்கியமாக சேலம் இரும்பு உருக்காலையை தனியாருக்கு தாரைவார்ப்பதில் ‘‘நிதி ஆயோக்''கின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. நல்லது செய்யாவிடினும் அல்லது செய்யாமலாவது இருக்கக்கூடாதா?

இந்த நிலையில் ‘‘நிதி ஆயோக்‘’கில் செயலாளர்கள் மட்டத் தில் தனியார் நிறுவனங்களில் இருந்து ஆலோசகர் மற்றும் அதிகாரிகளை சேர்க்க ‘‘நிதி ஆயோக்‘’ முடிவு செய்துள்ளது. நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய பங்கு வகிக்கும் நிறு வனங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ‘‘நிதி ஆயோக்‘’கில் தனியார் நுழைவு என்பது மிகவும் ஆபத்தை விளைவிக்க கூடிய ஒன்றாகும்.  தனியார் மயம் என்பதுதானே மோடி அரசின் தாரக மந்திரம்.

‘‘நிதி ஆயோக்‘’கின் தனியார் மயம் குறித்து பேசிய அதன் செயலாளர்களுள் ஒருவரான அமிதாப் காந்த் கூறும்போது,  ‘‘நிதி ஆயோக்‘’கிற்கு மிகவும் திறமை வாய்ந்த, செயல்திறன் மிக்க வர்கள் தேவைப்படுகின்றனர். தற்போது உள்ள முறைப்படி அரசு அதிகாரிகள் பணிமூப்பு மற்றும் பதவி உயர்வு போன்றவற்றால்  ‘‘நிதி ஆயோக்‘’கின் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘‘நிதி ஆயோக்‘’ குறித்து பல்வேறு விமர் சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் அதிகாரிகள் பற்றாக்குறை மற்றும் பதவி உயர்வு போன்ற காரணத்தால் திட்டங்கள் தீட்டுவதிலும், முறைப்படுத்துவதிலும் தாமதம் ஏற்படுகிறது. ஆகவே, தனியார் நிறுவனங்களில் இருக்கும் சிறந்த அதிகாரிகளை தேர்ந்தெடுத்து செயலாளர் மற்றும் இணை செயலாளர், ஆலோசகர்கள், இணை ஆலோசகர்கள் போன்ற பணிகளில் அவர்களை நியமிக்க இருக்கிறோம்‘’ என்று கூறினார்.

இது குறித்து ‘‘நிதி ஆயோக்‘’கின் அதிகாரி ஒருவர் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளிக்கையில், ‘‘புதிய பதவிகள் உருவாக்கப்படுகிறது; இதற்குத் தனியார் நிறுவன அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிகளுக்கு தகுதி மற்றும் அவர்களின் செயல்திறன்களின் அடிப்படையில் தேர்ந் தெடுக்கப்படுவார்கள்.

தனியார் நிறுவனங்கள் தற்போது மிகவும் திறமையுடன் செயல்பட்டு வருகின்றன. அரசு நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது அங்கே பல்வேறு பிரச்சினைகள் எளிதாக தீர்க்கப்பட்டு, விரைவாக வளர்ச்சியை தனியார் நிறுவனங்கள் எட்டிவருகின்றன. அரசு நிறுவனங்கள் பல்வேறு பிரச்சனைகளில் வளர்ச்சியடையாமல் சுணக்கம் காட்டி வருகிறது’’ என்று அவர் கூறினார். ஏன் அரசையே தனியார் முதலாளிகளிடம் ஒப்படைத்து விடலாமே!

முன்பு இருந்த திட்டக் கமிசனில் மோடக் சிங் அலுவாலியா, ஆர்.வி.சாஹி போன்ற திறமையானவர்கள் இருந்தனர். ஆனால், இந்த அரசு  அய்.ஏ.எஸ். பதவியைத் துறந்து உலக வங்கி பணிக்குச்சென்ற பரமேஷ்வரன் அய்யர் போன்றவர்களை ‘‘நிதி ஆயோக்‘’கில்  மீண்டும் அழைத்து, ஒப்பந்த அடிப்படையில் அவர்களுக்குப் பணி வழங்கி வருகிறது. இப்படி தனியார் நிறுவன அதிகாரிகளுக்கு மாதம் 2.88 முதல் 3.64 லட்சம் ரூபாய்வரை ஊதியம் வழங்க முடிவு செய்துள்ளது. இது ‘‘நிதி ஆயோக்‘’கின் அரசு அதிகாரிகளுக்குக் கொடுப்பதை விட 2 மடங்கு அதிகமாகும்.

இந்த ஒப்பந்த அடிப்படைப் பணிகள் அய்ந்து ஆண்டுகள் மற்றும் ஏழு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். மேலும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவர்களுக்கு அவர்களின் திறமை அடிப்படையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுமாம். இந்த தனியார் நிறுவன அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு துறைப் பணியாளர் தேர்ந்தெடுப்பு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகளின் தேர்வை இறுதி முடிவு செய்யும் இடத்தில் ‘‘நிதி ஆயோக்‘’கின் இணைத்தலைவர் இருக்கிறார்.  இருப்பினும் இறுதி முடிவு எடுப்பது ‘‘நிதி ஆயோக்‘’கின் தலைவராக உள்ள பிரதமர் மோடி கையில் தான் உள்ளது.

வரலாற்றுத் துறைதான் காவி மயம் என்றால், திட்டக்குழுவும் அந்த நிலையைத்தான் எட்டப் போகிறது.

‘‘நிதி ஆயோக்‘’கின் 12 ஆவது அய்ந்தாண்டுத் திட்டம் முழுக்க முழுக்க தோல்வி அடைந்தது. மோடி அரசு பதவியேற்றதில் இருந்து ‘‘நிதி ஆயோக்‘’ என்பது உறைந்து கிடக்கிறது.  மார்ச் மாதத்திற்குள் முடிக்கவேண்டிய ‘‘நிதி ஆயோக்‘’கில் 12 ஆவது அய்ந்தாண்டு ஆண்டுத் திட்டம் இன்றுவரை முடியாமல் மேலும் 7 மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே ‘‘நிதி ஆயோக்‘’கின் செயல்பாட்டை முடக்கிவைத்து அங்கு தனியார் மயத்தை நோக்கித் தள்ளும் தந்திரமே இது!

‘‘நிதி ஆயோக்‘’ போன்ற மிகமுக்கியமான அரசு திட்ட நிறுவனத்தில் தனியார் மயம் என்பது நாடு எதிர்கொள்ளும் ஆபத்திற்கான சமிக்கை என்பது ஒருபுறமிருக்க அங்கே சமூகநீதி முற்றிலும் புறக்கணிக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது.

Comments  

 
#1 pugazhendhi 2017-04-14 15:16
நிதி அயோக்கின் தற்போதய செயலாளர்களே உலக வங்கி போன்ற அமைப்புகளில் பணியாற்றியவர்கள ்;நாட்டின் ஏழைகளின் நல்வாழ்வில் அக்கறை இல்லாதவர்கள்;உத ாரணத்துக்கு,நித ி அயோக்கின் ஒரு துணைத்தலைவரான பிபேக் ஓபராய் என்பவர் தலைமையில் இயங்கிய குழு ரயில்வே சீர்திருத்தம் பற்றி தனது பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ள து;ரயில்வேயை தனியார் மயமாக்குவது,ரயி ல் டிக்கெட்டுகளின் விலையை உயர்த்துவது,புத ிய ரயில்களை விடாதது,புற நகர் ரயில்களை இயக்கும் பொறுப்பை அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைத்துவிட்ட ு,ஓசையின்றி ஒதுங்கிக்கொள்வத ு,ரயில்வே ஸ்டேஷன் பராமரிப்பிலிருந ்து ஒதுங்கிக்கொண்டு ,அந்த பணியை தனியாரிடம் ஒப்புவித்து,ரயி ல்வே சொத்துகளை அவர்கள் உபயோகப்படுத்திக ்கொள்ள அனுமதிப்பது,ரயி ல்வே துறையை வணிக மயமாக்கி,அந்த துறையின் மக்கள் சேவையை முடக்குவது,ரயில ்வே பட்ஜெட் என்று தனியாக திட்டமிடாமல் அதன் முக்கியத்துவத்த ை குறைத்து பொது பட்ஜெட்டோடு சேர்த்தது எல்லாம் அந்த குழுவின் பரிந்துரைகள்;இந ்த குழுவில் பிபேக் ஒபெராயோடு ஏழு உறுப்பினர்கள் இருந்தனர்;அவர்க ள் யாரும் ரயிலில் சாதாரண வகுப்பில் பயணித்தவர்கள் இல்லை
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner