எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பெரும் பான்மைப் பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக மாநிலம் முழுவதும் வெற்றி யாத்திரை என்ற பெயரில் பெரும் அராஜகத்தை அரங்கேற்றி வருகிறது. இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் வேண்டுமென்றே ‘‘ஜெய் சிறீராம்‘’, ‘‘ஜெய் ஜெய் மகாதேவ்’’ என்ற முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் புலந்த்சாகர் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் சன்காரி என்ற பகுதியில் மேளம் தாளம் ஆட்டம் பாட்டம் என அமர்க்களமாக சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் தெருவிற்குள் நுழைந்தனர். அவர்கள் கையில் காவிக்கொடிகள் மற்றும் பாஜகவின் கொடிகள் இருந்தன.

அந்த ஊர்வலம் அங்கிருந்த ஒரு மசூதியை அடைந்ததும், சிலர் மசூதியின் உச்சிப்பகுதிக்குத் தாவி பாஜக கொடி மற்றும் காவிக்கொடியை ஏற்ற முயன்றுள்ளனர். இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், ஊர்வலத்தில் வந்த வர்களுக்கும் இடையே வன்முறை ஏற்படும் சூழல் உருவானது. காவல்துறையினர் பாஜகவினரை விரட்டி சிலரை விசாரணைக்கு அழைத்துச் சென் றுள்ளனராம்.

இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உடன் புலந்த்சாகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் பதட்டம் உருவாகியுள்ளது.  பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியில் வந்த பிறகு மசூதியில் காவிக்கொடி மற்றும் பாஜக கொடி ஏற்ற முயன்றனர் என்பது சாதாரண செய்தியல்ல.

சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக சட்டத்தின் வட்டத்துக்குள் கொண்டு வந்து தண்டிக்கப்படாவிட்டால், ‘தடி எடுத்தவன் தண்டல் காரன்’ என்ற நிலைதான்!

இப்பொழுது உ.பி.யில் முதலமைச்சராகப் பதவி ஏற்கும் ஆதித்யநாத் என்னும் இந்துத்துவா பேர்வழியின் கடந்த கால நடவடிக்கைகள் எத்த கையது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே!

முதலமைச்சராக இவர் தேர்வு செய்யப்பட்டு விட்டார் என்ற தகவல் வந்த நிலையில், செய்தி யாளர்களுக்கு அவர் திருவாய் மலர்ந்து சொன் னது என்ன?

சும்மா வளர்ச்சி வளர்ச்சி என்று சொல்லிக் கொண்டு இருப்பதில் எவ்விதப் பொருளும் கிடை யாது. எங்களைப் பெருவாரியான வகையில் உ.பி. மக்கள் தேர்வு செய்திருப்பது எதற்கு என்பது தெரிந்த ஒன்றே! அதனை நிறைவேற்றிக் காட்டுவோம் என்று ‘பூடகமாகச்‘ சொல்லியுள்ளார்.

ராமர் கோவில் கட்டுவதற்குதான் மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே, ராமர் கோவிலைக் கட்டுவோம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஆர்.எஸ்.எஸ். முக்கிய பிரமுகர் வைத்யா போன்றவர்கள் உ.பி. தேர்தலுக்குப் பிறகும் கூறி யுள்ளனர்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட வேண்டுமானால் அதற்கு உகந்த ஒரு முதல மைச்சர் பி.ஜே.பி.க்குத் தேவைப்படுகிறார். அத் தகைய ‘‘உவகைப் பெருமாந்தர்தான்’’ சாமியார் வேடதாரியான யோகி ஆதித்யநாத். ஒரு முகமூடி, உஷார்!

அடுத்துவரும் கால கட்டம் என்பது உ.பி. மக் களுக்கு மட்டுமல்ல; இந்தியத் துணைக் கண் டத்துக்கே துயரமிகுந்த பருவமாக இருக்கப் போகிறது.

மக்களை இந்து, முஸ்லிம் என்று கூறு போட்டு, ராம ராஜ்ஜியத்தை உண்டாக்குவதுதான் அவர்களின் நோக்கம்; மதச் சார்பற்ற சக்திகள் ஒரு முக்கிய புள்ளியில் ஒருங்கிணைந்து ஓங்கு முகமாக செயலாற்றவேண்டிய காலம் வந்துவிட்டது - வந்தே விட்டது!

ஒன்றிடுவோம்! வென்றிடுவோம்!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner