எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 406 இடங்களில் நான்கில் மூன்று பங்கு இடங்களான 312 இடங்களைப் பெற்றும் முதல்வரைத் தேர்தெடுக்க பாஜக தலைமை திணறி வருகிறது.

இதில் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைக்கப்பட்ட முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் குழு புதிய பார்முலா ஒன்றை வைத்துள்ளது. அதில் பார்ப்பனர் அல்லது உயர் ஜாதியைச் சேர்ந்த ஒருவருக்கு முதல்வர் பதவியும், இரண்டு துணை முதல்வர் பதவியைத் தேர்ந்தெடுத்து அதில் ஒன்று தாழ்த்தப்பட்டவருக்கு, மற்றொன்று பிற்படுத் தப்பட்டவருக்கும்கொடுக்கபரிந்துரைசெய்துள்ளது.இருப்பினும் 20 ஆம் தேதிவரை முதல்வர் பதவிக்கான ஆலோசனை தொடர்ந்து நடைபெறும் என்று டில்லி பாஜக தலைமை கூறியிருக்கிறது.

12, 13, 14 ஆகிய மூன்று நாள்களிலும் கூடிய பாஜக உபி. சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் முதல்வர் பதவிக் கென்று பலத்த போட்டி நிலவியது. சுமார் 80-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் முதல்வர் பதவிக்கு தங்களை முன்னிறுத்தி வருகின்றனர். இதனால் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.

இதனால் முதல்வர் பதவிக்கு ராஜ்நாத் சிங்கையே டில்லியிலிருந்து அனுப்பி வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  இந்த நிலையில் யோகி ஆதியநாத் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். தன்னை முதல் வராக்கவேண்டும் என்றும், மேற்கு மற்றும் வடக்கு உ.பி.யில் பெற்ற அமோக வெற்றிக்கு நான் தான் காரணம், என்னை தவிர்த்து வேறு யாரையும் முதல்வராக்க முடிவு செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் கூறிவருகிறார்.

சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள் குறித்து கேவலமாக விமர்சித்து வருபவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாத்ரி அக்லாக் படுகொலையைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மகேஷ் சர்மா, முசாபர் நகர் கலவர நாயகனாக கருதப்பட்ட சங்கீத் சோம் போன்றோரும் பாஜகவின் முதல்வர் பட்டியலில் உள்ளனர்.

அதேநேரத்தில் மிகவும் அதிக உறுப்பினர்களைப் பெற்ற புந்தேள்கண்ட் பகுதியைச் சேர்ந்த மத்திய அமைச் சர் உமாபாரதி தனது ஜாதியைச் சேர்ந்த ஒருவரை முதல் வராக்கவேண்டும் என்று திடீர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் கோவையில் கூடாரமிட்டு தங்கியுள்ள மோகன் பாகவத்தை டில்லிக்கு அழைத்து ஆலோசனை பெற முற்பட்டார்கள். ஆனால் அவரை டில்லிக்கு அழைத்தால் முதல்வர் பதவியை தேர்ந்தெடுப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் அம்பலமாகிவிடும் என்ற நிலையில் வெங்கையா நாயுடு மற்றும் ராஜ்நாத் சிங் 18 ஆம் தேதி கோவை வருகின்றனர்.

பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி அமைத்த ஜாதி சங்க கட்சிகளான அப்னா தள், பாரதீய சமாஜ் கட்சி, நிர்மல் இந்திய ஹமாரா ஆம் தள் போன்றவையும் அமைச்சர் பதவிக்காக கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரும்பான்மையில்லாமல் எட்டு எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி கோவாவிலும், 10 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி மணிப்பூரிலும் ஆட்சி அமைத்த பாஜக விற்கு, உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகாண்டில் மூன்றில் ஒரு பங்கு வென்றபோதும் அங்கெல்லாம் முதல்வரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் திணறி வருகின்றது.

தேர்தலில் வெற்றிபெற்ற அன்றே பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தொலைக்காட்சி நேர்காணலில் பேசும் போது 13 ஆம் தேதிக்குள் முதல்வரை முடிவுசெய்து 16 ஆம் தேதி உ.பி. மற்றும் உத்தராகாண்டில் முதல்வர்கள் பதவி ஏற்பார்கள் என்று கூறினார். இன்று தேதி 16 அய் கடந்தும் முதல்வரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை.

பாரதீய ஜனதா என்றாலே பார்ப்பன ஜனதா கட்சிதான். இதனை நாம் கூறுகிறோம் என்பதைவிட, அக்கட்சியின் மூத்த தலைவராக இருக்கக் கூடியவர்களுள் ஒருவரான செல்வி உமாபாரதியே சொன்னதுண்டு.

‘‘பாரதீயஜனதாகட்சியின்தலைவர்கள்தங்கள்கொள் கைகளில் நிலையற்றவர்களாக இருக்கிறார்கள். கட்சி யின் தலைமை மேல்ஜாதி பார்ப்பனர்களின் ஆதிக்கத் திற்குள்ளேயே இருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள்தான் கட்சியில் புறக்கணிக்கப்படுகிறார்கள். தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சரியாக வழங்கப் படுவதில்லை. வேறுபாட்டுக் கண்ணோட்டத்தோடு பார்க்கப் படுகின்றனர். பார்ப்பனர் மற்றும் முன்னேறிய ஜாதியினருக்கே அதிக வாய்ப்புகள் தரப்படுகின்றன. இது மிகப்பெரிய சமூக அநீதியாகும்.’’ (மத்திய பிரதேசம் போபாலில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியிலிருந்து, 25.4.1996).

உத்தரப்பிரதே முதலமைச்சராக இருந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கல்யாண்சிங் என்ன சொல்லுகிறார்?

‘‘பாபர் மசூதிக்கு ஒன்றும் ஆகாது என்று என்னிடம் பா.ஜ.க.தலைவர்கள்தெரிவித்தனர்.அயோத்தியில் அடையாள கரசேவை மட்டுமே செய்யப்படும் என உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் இருவர் எழுத்துப் பூர்வமாகத் தெரிவித்தனர்.  அவர்களது வாக்குறுதியை நம்பியே மசூதி பாதுகாக்கப்படும் என நானும் உச்சநீதிமன்றத்தில் வாக்குறுதி கொடுத்தேன். நான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்பதால், என்னை முதல்வர் பதவியிலிருந்து நீக்க பா.ஜ.க. தலைவர்கள் இந்த விஷயத்தில் சதி செய்தனர் என்று தோன்றுகிறது.’’ (‘தினமணி’, 3.5.2009).

பா.ஜ.க. என்பது பார்ப்பன ஆதிக்க ஜனதா என்பதற் கான சாட்சியங்கள் அவர்களின் முகாமிலிருந்தே கிடைத்து விட்டதா இல்லையா?

பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் சிந்திப்பார்களாக!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner