எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நாட்டில்மக்களின்உயிர்கள்தான்மலிவாஎன்ற கேள்வி எழுகிறது. ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் பட்டாசுவெடிவிபத்துகள்சராசரியாக27நடை பெறுகின்றன. அதில், தொழிலாளர்கள் கொல்லப்படு கின்றனர். இது ஏதோ வானிலை அறிக்கை போல அவ்வப்பொழுது வந்துகொண்டுள்ளது.

விபத்து நடக்கும் அந்தக் காலகட்டத்தில் மட்டும் பரபரப்பாகப் பேசப்படுவதோடு சரி - அதற்குப் பிறகு ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்ற நிலைதானா? கடந்த 11 ஆம் தேதிகூட சிவகாசியில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பெண் கள் உள்பட அய்ந்து பேர் மரணம் என்ற செய்தி வெளிவந்துள்ளது. நேற்றும் திருத்தங்கலில் விபத்து- ஒருவர் பலி!

இதற்கெல்லாம் காரணம்தான் என்ன? விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை என்றால், அவற்றின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்தான் என்ன?

பட்டாசு உற்பத்திக்கு பாதுகாப்பான வேதிப் பொருள்களான1.பொட்டாசியம்நைட்ரேட்

2. அலுமினியத்தூள் 3. பேரியம் நைட்ரேட் போன்ற வைதான் பயன்படுத்தவேண்டும் என்பது விதிமுறை. இந்தக் கலவையைப் பற்றவைத்தால் மட்டுமே வெடிக்கும். உராய்வினாலோ அல்லது சிதறிவிழும் தீப்பொறியினாலோ இந்தக் கலவை தீப்பற்றுவதில்லை.

அதேநேரத்தில் இந்தக் கலவையில் பட்டாசு தயார் செய்து அதைக் காயவைத்து பயன்பாட்டிற்குக் கொண்டு செல்ல அதிக நேரம் பிடிக்கும். ஆகையால், பட்டாசு நிறுவன உரிமையாளர்கள் வேலையை விரைவாக முடிக்கவும், சரக்குகள் அதிகம் தயாரித்து விற்கவும் குறைந்த விலையில் கிடைக்கும் 1. பொட்டாசியம் குளோரைடு 2. சோடியத் தூள் ஆகியவைகளைப் பயன்படுத்துகின்றனர்.இதில்சோடியத்தூள்வண் ணங்கள் வருவதற்காக சேர்க்கப்படுகின்றது. அயல் நாடுகளில் வாண வேடிக்கைக்காக சோடியத்தூள் கலவையைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மக்கள் வசிக்கும் பகுதியைவிட்டு நீண்ட தொலைவில் அமைக்கப்பட்டு இருக்கும்.

ஆனால், சிவகாசியில் இந்த வகை வேதிக் கலவைகளை கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசுகள்,  ஊருக்குள்ளேயே தயாரிக்கப்படுகின்றன. மேலும் இவை பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. இவ்வகைக் கலவைகள் கொண்ட பட்டாசுகளில் வியர்வைத் துளி பட்டால்கூட அவை வெப்பமடைந்து எரியும் தன்மை கொண்டவைகளாம். இவற்றைக் கையாளும்போது விரல் உரசலில் ஏற்படும் வெப்பம்கூட தீப்பொறியை உண்டாக்கிவிடும் ஆபத்து உள்ளது.

சிவகாசியில் நடந்த பெரும்பாலான விபத்துகள் தீப்பொறியினால் ஏற்பட்டவை அல்ல. அவை கையாளும்போதும், இடமாற்றம் செய்யப்படும்போதும் ஏற்பட்ட உரசல்களின் மூலம் வெடித்துச் சிதறியவைகள்!

இதுகுறித்து ‘விடுதலை’யில் (2015 ஆம் ஆண்டு, அக்டோபர்) தலையங்கம்கூட எழுதப்பட்டதுண்டு. லாபத்திற்காக அதிக ஆபத்து விளைவிக்கும் வேதிப் பொருள்களை பட்டாசு உரிமையாளர்கள் வாங்குவதை தடைசெய்ய வேண்டும்.  அப்படி வேதிப்பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்ற முகவர்கள் மூலம் தேவையான அளவு பொருள்கள் கேட்கப்பட்ட (ஆர்டர்) பின்னரே விற்பனைக்குக் கொடுக்கவேண்டும் - இதற்கான சட்டமே இருக்கிறது. இப்படி ஒரு சட்டம் இருந்தும் லாபம் பார்ப்பதற்காகவே அபாயகரமான வேதிப்பொருள்களை தேவைக்கு அதிகமாக விற்பனை செய்வது பட்டாசு தொழிற் சாலைகளில் விபத்துகள் தொடர்ந்து நடக்க காரணமாகி விடுகிறது.

இந்தியாவில் மட்டும்தான் பட்டாசுத் தொழிற்சாலை கள் இருக்கின்றனவா? மற்ற மற்ற நாடுகளில் இல்லையா? அங்கெல்லாம் பாதுகாப்பாக எப்படி கையாளுகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு, அதற்கேற்ப இங்கு செயல்படுத்துவதில் கவலையும், அக்கறையும் கொள்ளவேண்டாமா?

அமைச்சர்கள், அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் செல்லுவது எதற்காக? ஊர் சுற்றிப் பார்க்கவா?

வெட்கக்கேடு! வெட்கக்கேடு!!

மனித உயிர்கள் இவ்வளவு கேவலமாகவா, துச்ச மாகவா உதைத்துத் தள்ளப்படவேண்டும்.

இந்த உயிரிழப்புகளுக்குப் பொறுப்பு உறுதியாக அரசே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner