எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தேர்தலுக்காக பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவீசி மக்களை ஏமாற்றும் கட்சிகள் ஆங்காங்கே இன்றும் இருந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஒரு நாட்டின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரே மேடைக்கு மேடை பச்சையாக உண்மைக்கு மாறான வற்றைக் கூறி மக்களை ஏமாற்றுவது இந்தியாவில் இதுவே முதல் முறையாக நடைபெறும் ஒன்றாகும்.

2014ஆம் ஆண்டு நாடு முழுவதும் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி பல்வேறு வாக்குறுதிகளை அள்ளிவீசினார். அப்போது அவர் தேர்தலில் போட்டியிடும் ஒருவேட்பாளராகவும் இருந்தார். ஆனால் அவர் பதவிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா இல்லையா என்பது அவரின் நடவடிக்கைகளின் மூலமே தெரிந்து வருகிறது. தேர்தலில் வெற்றிபெற்று தலைமைப் பொறுப்பில் அமர்ந்த பிறகு மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களின் போது தனது கட்சியான பாஜக வெற்றி பெறச் செய்யும் நிலையில் 'இப்போது முக்கிய பொறுப்பில் இருக்கிறேன், நான் சொல்வதை உடனே நிறைவேற்ற எனது நிர்வாகம் காத்திருக்கிறது' என்று பொய்யைக் கூறி வாக்கு சேகரித்துவந்தார்.

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலின் போது பீகார் மாநில வளர்ச்சிக்கென்று. அவர் அறிவித்த ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான நிதியுதவி திட்டம் 18 மாதங்கள் ஆகியும் இன்னும் வந்து சேரவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

மும்பையை சேர்ந்த அனில் கல்காலி என்பவர் கடந்த டிசம்பர் மாதம் மத்திய நிதியமைச்சகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்தார். அதில் பல மாநிலங்களுக்கு மோடி அளித்த மெகா நிதியுதவி திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத் தொகுப்புகளின் விவரங்களை அளிக்குமாறு கேட்டி ருந்தார். நிதி தொகுப்பு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விகளுக்கு நிதியமைச்சக துணை இயக்குநர் ஆனந்த் பர்மார் மழுப்பலாக பதில் கூறியுள்ளார்.

கல்காலி கூறுகையில், "கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி பீகார் மாநிலத்துக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 3 கோடி மதிப்பிலான சிறப்பு நிதி தொகுப்புகளை பிரதமர் மோடி அறிவித்தது பல கட்டங்களாக நிறை வேற்றப்படும் என்று ஆனந்த் பர்மார் அளித்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு பைசா கூட இந்த திட்டங்களுக்கு வழங் கப்படவில்லை என்பது உறுதியாகிறது" என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "நாட்டின் பிரதமர் ஒருவர் அறிவித்த திட்டங்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப் படாமல் இருப்பது வெட்கக்கேடான செயல். இந்த நிலையில் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடந்த உ.பி.யில் பெரிய பெரிய வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது. 125 கோடி மக்களுக்கு ஆளும் பாஜகவானது வாய் ஜாலங்களைக் காட்டி வருகிறது. ஆனால் இந்த அரசின் நிலை வேறு விதமாக இருக்கிறது. இவர்களது வாக்குறுதிகளை மக்கள் எப்படி நம்புவார்கள்?" என்றார் அவர்.

இதேபோல், ஜம்மு காஷ்மீர் கூட்டணி ஆட்சியில் பங்கேற்றுள்ள பாஜக கடந்த 2015ஆம் ஆண்டில் ரூ.80 ஆயிரத்து 68 கோடியில் நிதியுதவி திட்டம் அறிவித்தது. இதிலும் பீகார் போன்ற நிலை தான் நீடிக்கிறது. அந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை சீர் செய்வதற்கு நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் இந்த நிதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு அடுத்தபடியாக சிக்கிம் மாநிலத்திற்கு 2016ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி சுற்றுலா மேம்பாட்டுக்காக ரூ.43 ஆயிரத்து 589 கோடி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு இதற்கான நிதி விரைவில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இங்கு 1994ஆம் ஆண்டு முதல் சாம்லிங் முதல்வராக இருந்து வருகிறார். அதோடு தேர்தலும் 2019ம் ஆண்டு மத்தியில் தான் வர இருக்கிறது. இப்போது ஏன் பாஜக அரசு அவசர அவசரமாக நிதி வழங்குகிறது என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது என்று கல்காலி தெரிவித்தார்.

இது மட்டுமா? தனது கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த உடன் இலங்கையுடன் அரை நூற்றாண்டுகளாக தொடர்ந்து நீடித்துவரும் மீனவர் பிரச்சினையைத் கண்டிப் பாகத்  தீர்த்து வைப்பேன் என்று 2014ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசினார். மேலும், மோடி பதவிக்கு வந்த பிறகு 2015ஆம் ஆண்டு மீனவர் பிரச்சினை குறித்து மோடி சிறப்பான நடவடிக்கை எடுத்துவருவதாகவும், இதனால் மீனவர் பிரச்சினை நாளுக்கு நாள் தீர்ந்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்து பேசினார்.

ஆனால், இவையெல்லாம் வெறும் ஏமாற்று வித்தைகள் என்பதும், பாஜக மற்றும் மோடிக்கு இந்த ஏமாற்றுவித்தைகள் அனைத்தும் கைவந்த கலை என்பதும் தற்போது அம்பல மாகியுள்ளன.

56 அங்குல மார்பளவு உள்ளவர் பிரதமர் மோடி என்பதால் அந்த அளவுக்கு வாக்குறுதிகளை வாரி வழங்குவதில் 'அட்டகாசமான' 'அதிசயமான' இந்த வகையில் வேறு எவரும் கிட்டே நெருங்க முடியாத சாதனையாளராக விளங்குகிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும் போலும்!

Comments  

 
#1 Pugazhendhi 2017-03-09 22:28
அண்மையில் ஒரு 17 வயது தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டு கொல்லப்பட்டார்; தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவர்கள் இனிமேல் இப்படிப்பட்ட துப்பாக்கி சூடுகள் நடக்காது என்கிறார்.2015 யிலேயே மீனவர் பிரச்னை தீர்ந்துவிடும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சொன்னதை தமிழிசைக்கு நினைவு படுத்துகிறோம்.பொன்னாருக்கு போட்டியாக போலி வாக்குறுதிகளை தமிழ்நாட்டு மக்களுக்கு அளிக்கவேண்டாம் அம்மையார் அவர்களே!இப்படிப ்பட்ட சம்பவங்கள் நடக்கும்போது இந்திய கடற்படையும்,கடல ோர காவல் படையும் என்னதான் செய்துகொண்டு உள்ளன?
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner