எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தேர்தல் என்பது ஆட்சி மாற்றம், நடைமுறை மாற்றம் என்றுதான் இன்றுவரை உள்ளது, ஆனால் இது அப்படி அல்ல

சில எடுத்துக்காட்டுகள்

உனா நிகழ்வு ஏன் நடைபெற்றது? இதுவரை அப்படி ஒன்று நடைபெற்றதா? 5 தாழ்த்தப்பட்ட இளை ஞர்கள் இறந்துபோன மாடுகளின் தோலை உரித்து அதை விற்க உரிமம் பெற்றவர்கள், இறந்து போன மாட்டின் தோலை உரித்ததற்காக 1 கிலோ மீட்டர் வரை அடித்து இழுத்துச் சென்றார்களே? ஏன்? இதற்கு முன்பு இப்படி நடந்துள்ளதா?.

அடுத்து  சாமியார் முதல்வர் ஆதித்யநாத் தனது அலுவலகத்தில் பட்டியல் இன மக்களைச் சந்திக்க மறுக்கிறார்.  அவர்கள் போராட்டம் செய்கிறார்கள். அலுவலகத்தின் வெளிவளாகத்திற்கு வருகிறார்.  அங்கு அனைத்து பட்டியல் இன மக்களும் வரிசையாக அமரவைக்கப்படுகின்றனர், அனைவரது பின்னாலும் ஒரு காவல்துறையினர் அவர்களை வலுக் கட்டாயமாக பிடித்து வைத்திருக்கின்றனர் காரணம் அவர்கள் சாமியார் முதல்வரை தொட்டுவிடக்கூடாதாம்.

அதுமட்டுமா நோய் தடுப்பு குறித்து ஒரு விழிப் புணர்வு நிகழ்ச்சி, அந்த நோய் தடுப்பிற்கு நிதி கொடுத் தது ஜப்பான் அரசு, அதற்கு சாமியார் ஆதித்யநாத்திற்கு அழைப்பு செல்கிறது, இவர் செல்கிறார். அதற்கு முன்பு அவர் செல்லும் பகுதியில் உள்ள பட்டியல் இன மக்கள் குடியிருப்பில் சோப்பு பவுடர் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு 5 டாங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து செயற்கை தொட்டிகளை உருவாக்கி நீர் நிரப்பிவிட்டுச் செல்கிறார்கள்.

ஏன்  தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதித்யநாத் வரும் போது சோப்பு போட்டு குளித்துவிட்டு பவுடர் பூசி அவரை வரவேற்க நிற்கவேண்டுமாம்,

2018-ஆம் ஆண்டு 462 என்கவுன்டர்கள் இதில் 240 பேர் பட்டியல் இன இளைஞர்கள், 108 பேர் இசுலாமியர்கள், மேலும் சிலர் வெளிமாநிலத்தவர்கள், இத்தனை என்கவுன்டர்களில் ஒருவர் கூட உயர்ஜாதி யினரான தாக்கூர்களோ பார்ப்பனர்களோ கிடையாது,

சம்ஜோதா ரயிலில் குண்டுவைத்த குற்றவாளி விடுதலை செய்யப்படுகிறார், அஜ்மீர் தர்கா, அய்தராபாத் உள்ளிட்ட பல இடங்களில் குண்டுவைத்த அபினவ் பாரத் என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளைப்பிரிவு நிர்வாகிகள் விடுதலை செய்யப்படு கின்றனர். குஜராத் போலி என்கவுன்டரில் ஈடுபட்ட வஞ்சாரா பாண்டியன் உள்ளிட்ட அய்பிஎஸ் அதிகாரிகள் விடுதலை செய்யப் பட்டு மீண்டும் பணிக்கு திரும்பு கின்றனர், குஜராத் கலவரத்தை முன்னின்று நடத்திய மாயாகோட்டாணி விடுதலை செய்யப்படுகிறார்,

அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், குஜராத், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 70-க்கும் மேற் பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் அடித்துக் கொல்லப் படுகின்றனர், காரணம் பசுமாட்டை கொலை செய் தார்கள் என்ற வதந்தி காரணமாக கொல்லப்பட்டனர்,

உத்தரப்பிரதேசம் முதல்வர் இல்லத்தில் 5 அய் ஏ எஸ் அதிகாரிகள் இதில் மூன்றுபேர் தாழ்த்தப் பட்டவர்கள்.  ஒருவர் பார்ப்பனர் ஒருவர் பிற்படுத்தப் பட்டவர் இவர்கள் அனைவரும் 23 ஆண்டுகளாக கல்யாண் சிங், மாயாவதி, அகிலேஷ்யாதவ் போன்றோர் முதல்வராக இருந்த போது தொடர்ந்து முதல்வர் இல்லத்தில் பணி யாற்றினார்கள்.

ஆனால் சாமியார் முதல்வராக அறிவிக்கப் பட்டவுடன் அந்தப் பார்ப்பனரைத் தவிர்த்து மற்ற 4 பேரும் உடனடியாக பணிமாற்றம் பெற்றனர். அதில் பட்டியல் இனத்தைச்சேர்ந்த மஞ்சே வால்மீகி என்ற அதிகாரி மாற்றுத்திறனாளி ஆவார், அவருக்கு கழிவுநீர் வடிகால் வாரியத்தின் நேரடிக்கண்காணிப்புத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார், மாற்றப்பட்ட சில நாட்களில் உடல் நிலை நலிவுற்று மரணமடைந்தார்.

அமைச்சருக்கும் நாடாளுமன்ற

உறுப்பினர்களுக்கும் இழைக்கப்பட்ட அவமானம்

ராம்பதி சாஸ்திரி, குலாபோதேவி என்ற  இரண்டு தாழ்த்தப் பட்ட அமைச்சர்கள் இதில் குலாபோதேவிக்கு அமைச்சரவையில் 12 மாதங்கள் இலாகா ஒதுக்கப்படவே இல்லை. அதன் பிறகு தாழ்த்தப்பட்ட பழங்குடியின நலத்துறை வழங்கப்பட்டது, ஆனால் இன்றுவரை அவருக்கு அரசு சார்பில் வீடு ஒதுக்கப்படவில்லை. அவரே தனது உறவினர்களில் ஒருவரை தனக்கு உதவியாளராக நியமித்துக்கொண்டார்,

இதே போல் தான் ராமாப்தி சாஸ்திரி இவருக்கு முதலில் கிராமம் மற்றும் சிறுநகரங்கள் வளர்ச்சித்துறை வழங்கப்பட்டது. ஆனால் அந்ததுறைக்கான அனைத்துப் பணிகளும் ஆணைகளும் இன்றுவரை துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாதான் பார்த்து கொண்டு இருக்கிறார். ராம்பதி சாஸ்திரியின் அலுவலக முகவரி என்று நீங்கள் கூகுளில் தேடினால் அது கேசவ் பிரசாத் அலுவலக முகவரியைத் தான் காட்டும், அதில் உள்ள தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டால் துணை முதல்வரின் உதவியாளர்தான் பேசுவார்.

இதுதான் அங்குள்ள தாழ்த்தப்பட்ட இரண்டு அமைச்சர்களின் நிலை,  இவர்களது நிலை மட்டுமல்ல உத்தரப்பிரதேசத்தின் 13 தாழ்த்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் தொடர்ந்து அவமானப்படுத்தப் பட்டு வருகிறோம் என்று மோடிக்கு கடிதம் எழுதி னார்கள்.

இந்தியில் எழுத்தப்பட்ட அனைத்து கடிதங் களும் 8.4.2018 அன்றைய விடுதலை நாளிதழில் தமி ழாக்கம் செய்யப்பட்டு வெளியானது, அதில் நாடாளுமன்ற உறுப்பினர் சாவித்திரிபாய்பூலே எழுதும் போது எனது மனுக்கள் அனைத்தும் எனக்கு முன் பாகவே உதவி யாளரை விட்டு எடுத்து வெளியே கொண்டு போகச் சொல்கிறார், அதாவது குப்பையில் போடச்சொல்கிறார் என்றுகூறினார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால் சாமானியர்களின் நிலை எப்படி இருக்கும்?

அதிகாரிகளுக்கு

இழைக்கப்பட்ட அவமானம்

இது உத்தரப்பிரதேசத்தில் மட்டும் என்று நினைத்து விடவேண்டாம்.

தன்னுடைய குறையைக் கூறவந்த ஒரு தாழ்த்தப் பட்ட வகுப்பைச்சேர்ந்த ஆசிரியையை காவலாளிகளை வைத்து வெளியே தூக்கிவீசுமாறு என்று உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறியதை தொலைக் காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்தன.

ராஜஸ்தானில் தலைமைச்செயலகத்தில் பணிபுரியும் தாழ்த்தப்பட்ட அதிகாரிகள் அமைப்பு ஊடகவி யாலாளர் சந்திப்பு ஒன்றை 4.2.2018அன்று நடத்தியது. அதில் அவர்கள் கூறிய குற்றச்சாட்டு பட்டியல் இதோ:

1. எங்களை அலுவலக உணவு விடுதியில் சாப்பிட அனுமதி மறுக்கப்படுகிறது,

2. எங்களது கார்களை அடையாளமிட்டு தனிப் பகுதில் நிறுத்த வற்புறுத்துகின்றனர்,

3.  எங்கள் துறை தொடர்பான எந்த ஒரு அறிக் கையும் எங்களிடம் கேட்டு முடிவெடுக்கப்படுவதில்லை,

4.  மிகவும் முக்கியமாக அன்று அம்பேத்கருக்கு நடந்த அவமான எங்களுக்கும் ஏற்பட்டது. ஆம் தலைமைச் செயலகத்தில் மொத்தம் 5 இடங்களில் அதிகாரிகள் குடிக்க தூய்மைப்படுத்தப்பட்ட குளிர்ந்த குடிநீர் குழாய்கள் உள்ளது. ஆனால் இதில் எதுவுமே நாங்கள் தண்ணீர் பிடிக்க முடியாது. எங்களது உதவி யாளர்களை தண்ணீர் பிடிக்கச் சொல்லி அனுப்பினால் அவர்கள் வெளியில் சென்று தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்ற வைத்திருக்கும் குழாயில் தண்ணீர் பிடித்து வருகிறார்கள் என்று பட்டியல் இட்டு கூறியிருந்தனர். இதை ‘ஜனதா கி ரிப்போர்ட்’ என்ற இணைய செய்தி தவிர வேறு எந்த ஊடகங்களும் வெளியிடவில்லை.

இந்தப்பட்டியலை மறைத்து ‘நவ்பாரத் டைம்ஸ்’ என்ற இந்தி ஜெய்ப்பூர் பதிப்பில் வெளியிட்ட செய்தியில் ‘தலைமைச்செயலகத்தில் ஒத்துழைக்காமல் முரண்டு பிடிக்கும் தாழ்த்தப்பட்ட அதிகாரிகள்’ என்று செய்தியை திருத்தி வெளியிட்டது,

கல்வியாளர்கள் மரணம்

ரோகித் வேமுலா, அனிதா,  ஜெதின் மகேஷ்வர், என நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட திறமையான கல்வியாளர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இவர்கள் அனைவருமே தாழ்த்தப்பட்டவர்கள். இதில் ரோகித் வேமுலாவின் மரணத்திற்குப் பிறகு உலப் புகழ்பெற்ற வானியல் அறிஞர் மறைந்த கார்ல்சகனின் மனைவி எழுதிய கடிதத்தின் தமிழாக்கம் விடுதலையில் வெளியானது, அதில் “இந்தியா எதிர்காலத்தில் மிகவும் திறமைவாய்ந்த ஒரு வானியல் அறிஞரை இழந்து விட்டது” என்று குறிப்பிட்டிருந்தார்.

புனே சாவித்திரிபாய் பூலே பல்கலைக்கழக விடுதியில் 4 தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மீது கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை வைத்திருந்தனர் என்ற காரணத்திற்காக அவர்கள் வெளியேற்றப்பட்டனர்,

ஆனால் உண்மை என்னவென்றால் இந்த நான்கு பேரும் கல்வியில் மிகவும் திறமையானவர்கள். இதில் சரஸ்வத் காராடே என்ற பொருளாதார மாணவர் கல்லூரியில் தங்கப்பதக்கம் வாங்கியுள்ளார். இவர்கள் அம்பேத்கர் கல்வி வட்டம் என்ற ஒன்றை நடத்தி வந்தனர். தனது அறையில் பெரிய அளவில் அம்பேத்கரின் படத்தை வைத்துள்ளனர்.

அந்தப்படமும் இவர்கள் வைத்திருந்த அமைப்பும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பிடிக்கவில்லை. நேரடியாக இவர்களை வெளி யேற்ற வாய்ப்பில்லாமல் போதைப்பொருள் குற்றம் சாட்டி வெளியேற்றப்பட்டனர். இவர்களும் மத்திய மனிதவளத்துறை வரை சென்று பார்த்துவிட்டனர். ஆனால் நீதி கிடைக்கவில்லை.

இப்படி பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் தாழ்த்தப்பட்டவர்கள் அது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி, அமைச்சர்களே ஆனாலும் சரி, அதி காரிகள் ஆனாலும் சரி, திறமையான மாணவர்கள் ஆனாலும் சரி, அவர்கள் உயிர்வாழ்வதற்கே தகுதியில் லாதவர்கள் என்று கூறும் கொள்கை கொண்ட ஒரு மனித விரோத அமைப்பு அரசியல் கட்சியாக உருவெடுத்து வந்திருக்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner