எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாகசாமி போலவே இந்திய அரசின் அட்டார்னி ஜெனரலாக இருந்த பராசுரனின் தந்தை  கேசவ அய்யங்கார் என்பவர், சமஸ்கிருதத்திலிருந்தும், வடமொழி நூல்களிலிருந்தும்  தொகுக்கப் பட்டது தான் திருக்குறள் என்று "ஸ்ரீவள்ளுவர் உள்ளம்" எனும் நூலாக எழுதினார். அதனை மறுத்து சென்னைப் பெரியார் திடலில் 4.3.1986, 5.3.1986 ஆகிய இரு நாள்களிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் மறுப்புரை நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சிக்கு ஜஸ்டிஸ் திரு. பி. வேணுகோபால் அவர்களும், மறுநாள் நிகழ்ச்சிக்கு அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்களும் தலைமை வகித்தனர். இரு நாளும் பெரியார் பேருரையாளர் புலவர் மா. நன்னன் கண்டன உரை நிகழ்த்தினார். அதன் விவரம் இதோ:

அகநாட்டார் கணிப்பு

பயன்மிகு பணிக ளாற்றும்

பகுத்தறி வாள ரேறே!

நயனிலா நூலிதனில்

நலனெதுங் கண்டே னல்லேன்.

மயலெனும் பெயர தொன்றும்,

மதமெனும் பெயர தொன்றும்

கயமையென் பெயர தொன்றும்

களிநடம் புரியக் கண்டேன்.

புறநாட்டார் கணிப்பு

எல்லாக் குறையு மிதன்பா லுளவிதன்பா

வில்லாத வெக்குறையு மில்லையால் - எல்லார்க்கும்

பத்துக் குற்றமும் பளிங்கென விளங்க

வய்த்துத் தொகுத்ததிந் நூல்.

குறிப்பு: சமஸ்கிருதத்திலிருந்தும் - வடமொழி நூல்களிலிருந்தும் தொகுக்கப் பட்டதுதான் திருக்குறள் என்ற பொருளில் கேசவ அய்யங்கார் என்ற வக்கீல் (இந்திய அரசு அட்டர்னி ஜெனரல் திரு. பராசுர அய்யங்காரின் தந்தையார்) எழுதிய "ஸ்ரீ வள்ளுவர் உள்ளம்" என்ற நூலுக்கு மறுப்புரையை மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் டாக்டர் மா. நன்னன் அவர்கள் 4.3.1986, 5.3.1986 ஆகிய இரு நாள்களிலும் சென்னை பெரியார் திடலில் நிகழ்த்தினார். அப்பொழுது அந்நூல் பற்றி டாக்டர் மா.நன்னன் அவர்கள் எழுதியுரைத்த பாடல்கள் இவை.

'பகுத்தறிவாளரேறே!' என்று பாடலில் விளிக்கப்பட்டது திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்களையேயாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner