எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருப்பதி, நவ. 9- திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவத்தின் போது லட்டு விற்பனையில் முறைகேடு செய்த 30 ஒப்பந்த ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

லட்டு டோக்கன்களை ஸ்கேனிங் செய்யும்போது சில குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி கவுன்டரில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் கள் சுமார் 16,000 லட்டுகளை முறைகேடு செய்தது பின்னர் தெரியவந்தது.

திருப்பதி கோவிலில் நவ ராத்திரி பிரம்மோற்சவம் கடந்த மாதம் 10ஆ-ம் தேதி முதல் 18 ஆ-ம் தேதி வரை நடைபெற்றது. பிரம்மோற்சவ விழாவைக் காண வரும் பக்தர்களின் வச திக்காக தேவஸ்தானம் சார்பில் தினந்தோறும் 7 லட்சம் லட்டு கள் இருப்பு வைக்கப்பட்டு பக்தர்களுக்கு விற்பனை செய் யப்பட்டது. இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் அய்ந்தா வது நாளான 14ஆ-ம் தேதி கருடசேவை நடைபெற்றது. இதைக் காண 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர்.

அப்போது லட்டு விற்ப னைக் கூடத்தில், லட்டு டோக் கன்களை கணினி முறையில் சரிபார்த்தபோது சில குளறு படிகள் ஏற்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி கவுன்டரில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்கள் சுமார் 16,000 லட்டுகளை முறைகேடு செய்தது பின்னர் தெரியவந்தது.

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான விஜி லன்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் லட்டு விற்பனைக் கூடத்தின் ஊழியர்கள் பலர் இந்த முறை கேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இந்நிலையில், லட்டு விற் பனையில் முறைகேட்டில் ஈடு பட்டதாக 30 ஒப்பந்த ஊழியர் கள்மீது திருமலை முதலாவது நகர காவல் நிலையத்தில் வழக் குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner