எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அரங்கு எண்: 61 09.11.2018 முதல் 21.11.2018 வரை சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி இணைந்து சேலத்தில் (போஸ் மைதானம்) நடத்துகின்ற முதலாம் ஆண்டு சேலம்  புத்தகத் திருவிழாவில்  பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு அரங்கு எண்: 61 ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கிறோம்.

இந்த அரங்கில் உலகத் தலைவர் அறிவாசான் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர், டாக்டர் கலைஞர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் நூல்களும் மற்றும்  உலக பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவுச் சிந்தனை நூல்களும், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கத் தலைவர்கள் பற்றிய நூல்களும், பெண்ணுரிமை, ஜாதி - தீண்டாமை ஒழிப்பு, சமூக நீதி, இட ஒதுக்கீடு, அசல் மனுதர்ம சாஸ்திரம், கீதையின் மறுபக்கம்,  இராமாயண, மகாபாரத, புராண இதிகாச மோசடிகள், மூடநம்பிக்கைகள், மதவெறி, மாட்டுக்கறி அரசியல்,  இந்தி, சமஸ்கிருத திணிப்பு, புதிய கல்விக்கொள்கை, நீட் நுழைவுத் தேர்வு, நவோதயா பள்ளிகளுக்கு எதிர்ப்பு பற்றிய நூல்களும் மற்றும் அறிவியல் சிந்தனை உள்ளிட்ட பல்வேறு தலைப்பு களில் ஏராளமான நூல்களும் கிடைக்கும்.

மேலும், பல்வேறு காலக்கட்டங்களில் வெளிவந்துள்ள திராவிடர் இயக்கப் பணிகள் பற்றிய வரலாற்றுச் செய்திகள் அடங்கிய ஆய்வு நூல்கள், கட்டுரைகள், பெரியார் களஞ்சியம், குடிஅரசு தொகுதிகளும் இங்கு விற்பனைச் செய்யப் படுகிறது.

கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு (எண் 61) வருகைதந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.

- மேலாளர்,

பெரியார் புத்தக நிலையம்.

இடம்: போஸ் மைதானம், (பழைய பேருந்து நிலையம் அருகில்), சேலம்.

புத்தகக் காட்சி நேரம்:

முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

சிறப்புத் தள்ளுபடி 10 சதவிகிதம்

தொடர்புக்கு:  95786 37462, 96266 57609, 76398 18254

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner