எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, நவ. 9- -மதுரை தோப்பூ ரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நட வடிக்கைகள் என்ன? என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு உள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் அமையவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி தமிழகத் தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என மத்திய அரசு அறி வித்தது. ஆனால் 2018-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி தான் தமிழகத்தில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமையவுள்ளது என்ற அறிவிப்பு வெளியானது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைய வுள்ளது என் பதே நான்கு ஆண்டுகள் தாமத மாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் தமிழகத்தோடு அறிவிக்கப்பட்ட பிற மாநிலங் களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. எனவே, எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான கட்டுமானப் பணிகளை தொடங்கு வதில் தாமதம் ஏற்படக்கூடாது. மதுரை தோப்பூரில்தான் எய்ம்ஸ் மருத் துவமனை அமையவுள்ளது என மத்திய அரசு அரசிதழில் வெளியிட வேண்டும்.  மத்திய அரசு அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெறவேண்டும். கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை விரைவுபடுத்த வேண்டும். எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு தேவையான நிதியை ஒதுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு வியாழனன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேச வலு அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், மதுரையில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும். அதில் மாற்றமிருக் காது எனத் தெரிவித்தார். அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ்மருத்துவமனை அமை யும் என அறிவிக்கப்பட்டபின், அதற்காக எடுக்கப்பட்ட நட வடிக்கைகள் என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு உத்தரவிட்டனர். மேலும், எய்ம்ஸ்மருத்துவ மனைக்கான கட்டுமானப் பணி கள் எப்போது தொடங்கும்? எவ்வளவு காலத்தில் நிறை வடையும் என்பது குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்க உத்தர விட்டு வழக்கை டிசம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner