எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, நவ.8 பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூன்றாவது ஆண்டு தொடக் கத்தை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களின் முன்பு வெள்ளிக்கிழமை (நவ.9) கண் டன ஆர்ப்பாட்டம் நடை பெறும் என்று தமிழ்நாடு காங்கிரசு கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் அறிவித் துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: பணமதிப்பிழப்பு நடவடிக் கையால் ஏற்பட்ட பொருளா தார சீரழிவை கருத்தில் கொண்டு, அதன் மூன்றாம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு காங்கிரசு கட்சி சார்பில் அந்தந்த மாவட்டங் களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு நவம் பர் 9-ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) காலை 11 மணி முதல் 1 மணி வரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெ றும். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எனது(சு.திருநாவுக்கரசர்) தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத், தமிழக சட்டப்பேரவை காங்கிரசு கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட் டோர் கலந்து கொள்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner