எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, நவ.8  பட்டாசு வெடிக்கும்போது அதில் சுற்றி யிருக்கும் காகிதங்கள் சிதறும். இதனால் தீபாவளிக்குப் பிறகு தெருக்கள் முழுவதும் காகித குப்பைகளாகவே காணப்படும். பெரும்பாலானோர் வீட்டின் முன்பு உள்ள குப்பைகளை கூட்டி தெருக்களில் ஆங்காங்கே மேடுகளாக அமைத்து வைத்து விடுவார்கள். அதனை மாநக ராட்சி ஊழியர்கள் வந்து அகற்றுவார்கள். அந்தவகையில் இந்தாண்டு தீபாவளியை யொட்டி, மாநகராட்சி பணியா ளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழி யர்கள் என மொத்தம் 19 ஆயிரம் பேர் துப்புரவு பணியில் ஈடு படுத்தப்பட்டனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் (மாலை 5.30 மணி வரை) 64 டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளது.

இந்த கழிவுகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி, கும்மிடிப் பூண்டி அருகில் உள்ள அபாயகர மான கழிவுகளை சேகரிக்கக் கூடிய தனியார் நிறுவனத்திடம் ஒவ்வொரு கட்டமாக ஒப்படைக் கப்பட்டு வருகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner