எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை திராவிடர் கழகத்தின் மேனாள்  செயலாளர்  மு. தருமராசன் (65) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

சிவகங்கை மாவட்டம் திருப் பத்தூர் அடுத்த தென்மாபட்டில் பிறந்த  அவர் மும்பையில் தனியார் நிறுவனத் தில் பணியாற்றி, கழக செயலாளராகவும் சிறப்பாகப் பணியாற்றியவர். பிறகு சென்னையில் 'விடுதலை' அலுவலக செய்திப் பிரிவிலும் பணியாற்றியவர். பிறகு கடந்த ஆறு மாத காலமாக நக்கீரனிலும் பணியாற்றி, தோழர் குமணராசனின் தமிழ் இலெமுரியா" இதழின் ஆசிரியராகவும் இருந்தார். அவருக்கு மனைவியும், மூன்று மக்களும் உண்டு.  திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்கு ஆட்பட்டு, பலனின்றி மறைந்தார். அவர் குடும்பம் பெங்களூருவில் உள்ள நிலையில் உடல் பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது பிரிவால் வருந்தும் அவர்தம் குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது வீர வணக்கம்!

- கி.வீரமணி

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

8-11-2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner