எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாளை (நவ. 9) நடைபெறுகிறது

சென்னை, நவ. 8- திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் கிரீமிலேயர் என்னும் கிருமி ஒழிப்புக் கருத்தரங்க மாநாடு (பிற்படுத்தப்பட்டோருக்குப் பொருளாதார அளவுகோல் ஒழிப்பு) 9.11.2018 அன்று மாலை 6.30 மணிமுதல் இரவு 8.30 மணிவரை நடைபெறு கிறது. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் மாநாட்டின் தலைமையேற்று உரை யாற்றுகிறார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் வரவேற்புரையாற்றுகிறார்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் பேராசிரியர் அருணன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி கருத்துரை ஆற்றுகின்றனர்.

மாநாட்டில் வகுப்புரிமை தொடர்பான நூல்கள் வெளி யிடப்படுகின்றன. கிரீமிலேயர் கூடாது ஏன்?, வகுப்புவாரி உரிமை ஏன்? வகுப்புவாரி உரிமையின் வர லாறும், பின்னணியும், சமூக நீதி, மண்டல் குழுவும் சமூக நீதியும், வகுப்புரிமை வரலாறு, எது வகுப்புவாதம்?, 69% இட ஒதுக்கீடு சட்டம் ஏன்? எப்படி? எவரால்?, தமிழ்நாட்டில் சமூக நீதி வரலாறு, ஜாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு, வகுப்புரி மைப் போராட்டம் ஆகிய நூல்கள் வெளியிடப்பட உள்ளன. 11 நூல்களின் மொத்த நன்கொடை மதிப்பு ரூ.343. மாநாட்டையொட்டி ரூ.93 சிறப்புத் தள்ளுபடி போக, ரூ.250க்கு அளிக்கப்படுகிறது.

சமூகநீதிக்கு ஏற்பட்டுள்ள பேராபத்தை உணர்த்தி உரிமை முழக்கமிடும் மாநாடாக இம்மாநாடு திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறுகிறது. சமூக நீதியில் அக்கறை கொண்டுள்ளவர்கள் கட்சிகளைக் கடந்து கலந்துகொள் கிறார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner