எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிறப்புக்கூட்டத்தில் தலைவர்கள் போர் முழக்கம்

சென்னை, நவ. 8- திருக்குறள் மனுதர்மத்தின் சாரமா? பார்ப் பனர் நாகசாமியின் ஆங்கில நூலுக்கு பதிலடி எனும் தலைப்பில் நேற்று (7.11.2018) மாலை சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில்  திராவிடர் கழகத்தின் சார்பில் சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருக்குறளுக்கு அவமதிப்பு என்பது ஒட்டு மொத்த தமி ழினத்துக்கு அவமதிப்பு என்று குறிப்பிட்டு, ஒன்றுபட்டு கிளர்ந் தெழுவோம் என்று சிறப்புக் கூட்டத்தில் பேசிய தலைவர் கள் போர்முழக்கமிட்டனர்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வர வேற்று தொடக்க உரையாற்றி னார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்தார்.

பேராசிரியர் மறைமலை இலக்குவன், எழுத்தாளர் பழ. கருப்பையா, திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்  ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.

நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

தமிழுக்கான இருக்கை ஹார்வார்டு பல்கலைக்கழகத் தில் அமைந்துள்ள இந்த நேரத் தில், நாகசாமி எனும் தனி நபர் அல்ல, பாஜக, ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் பின்னணியில்  திருக்குறள் குறித்து ஆங்கிலத் தில் திரிபுவாதக் கருத்துகளைப் பரப்புவதற்காக திட்டமிட்டு செய்கிறார்கள் என்பதை விளக்கி, அவற்றை தந்தை பெரியார் வழியில் முறியடிப்போம் என்று சூளுரைத்தார்.

நூல் வெளியீடு

தந்தை பெரியார் பேசிய பேச்சுகள், எழுத்துகளைக் கொண்ட தொகுப்பு நூலான பெரியார் களஞ்சியம்-திருக் குறள் வள்ளுவர் (தொகுதி 37) நூல் வெளியிடப்பட்டது. நன் கொடை மதிப்பு ரூ.250 சிறப் புக்கூட்டத்தில் ரூ.50 கழிவு போக ரூ.200க்கு அளிக்கப்பட் டது.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைத் தலைவர் கோ. ஒளிவண்ணன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத் தையன், த.கு.திவாகரன், கவி ஞர் கண்மதியன், த.க.நடராசன், தங்க.தனலட்சுமி, வட சென்னை பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ஆ.வெங்கடே சன், வழக்குரைஞரணி அமைப் பாளர் ஆ.வீரமர்த்தினி, புலவர் பா.வீரமணி, செந்துறை இரா சேந்திரன், கொரட்டூர் பன்னீர் செல்வம், தஞ்சை கூத்தரசன், இராமலிங்கம், ராகுலன் உள்பட பலர் தமிழர் தலைவர்  ஆசிரியர் அவர்களிடமிருந்து நூலைப்பெற்றுக் கொண்டனர்.

கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், பெரி யார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ் ணன், பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன், மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிட இயக்க தமிழர் பேரவை மாறன், தஞ்சை ஆறுமுக அடி களார் உள்பட ஏராளமானவர் கள் கலந்துகொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner