எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கனிமொழி, நியூஜெர்சி

என் கல்லூரிக் காலங்களில் பேசத் தொடங்கும் போது ஆசிரியரின் உரைகளை அப்படியே மனப்பாடம் செய்து தான் பேசத் தொடங்கினேன்; அவர் பயன்படுத்தும் சொற்களின் தேர்வு, அதன் கோவை, உரையை முடிக்கும் போது எப்படி எழுச்சியுடன் முடிக்க வேண்டும் என்பதை எல்லாம் எங்களைப் போன்றவர்களுக்கு கற்றுக் கொடுத்தது ஆசிரியரின் பேச்சுகள் தான்; அதே போன்று ஆசிரியர் அரங்கில் உரையாற்றுவதற்கும், பொதுக் கூட்டத்தில் உரையாற்றுவதற்கும்; திராவிடர் இயக்கத்தினரிடம் உரை யாற்றுவதற்கும், அறிஞர்கள் அரங்கில் உரையாற்றுவதற்கும், கல்லூரிகளில் உரையாற்றுவதற்கும், ஆங்கிலத்தில் உரை யாற்றுவதற்கும் வேறுபாடுகள் இருக்கும்; அரங்கை பொறுத்து - கேட்போரை பொறுத்து உரைகளின் தன்மை மாறும் ; ஒரு பேச்சாளர் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய பண்பு அது! அதே போன்று தமிழ் நாட்டில் நான் அறிந்த வரை ஆதாரங்களுடன், ஆளுயர் நூல்களுடன் உரையாற்றுபவர் ஆசிரியர் அவர்கள்தான்; அவர் உரையாற்றிக்கொண்டே இருக்கும் போது, ஏதோ ஒரு நூலில் இருந்து குறிப்பை தேட வேண்டும் எனும் போது, பேச்சை அப்படியே நிறுத்திவிட்டு குறிப்புகளைத் தேட மாட்டார்; பேசிக்கொண்டே தான் குறிப்புகளை எடுத்துப் பேசுவார்; பேச்சாளர் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பண்பு; அதே போன்று ஆசிரியர் உரைகளில் பூராவுமே என்ற சொல்லை உரையின் தொடர்ச்சிக்கு பயன்படுத்துவார்கள்; ஒரு பேச்சாளர் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கும் போது , குறிப்பாக ஆசிரியர் போன்று 1-1.5 மணி நேரம் பேசும்போது ஒரு இணைப்புச் சொல்லின் அவசியம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது.

ஆசிரியர் உரைகள் என்பது அடுத்த தலைமுறையை மாற்றும் உறைவாள் என்றால் மிகையல்ல!

தகவல்: மருத்துவர் சோம.இளங்கோவன்,

சிகாகோ.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner