எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முதல் அமைச்சர் பினராயி விஜயன் கிடுக்கிப்பிடி கேள்வி

கண்ணூர், நவ. 8 - உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக சபரிமலையில் கலவரம் நடத்த வந்தவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக விசாரணையை எதிர்கொண்டு வரும் வல்சன் நிலங்கேரியாவார்.கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வல்சன் நிலங்கேரி. ஆர்எஸ்எஸ் தலைவரான இவர் செவ்வாயன்று சபரிமலைக்கு வந்தார். இவருடன் கண்ணூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அய்யப்பன் வேடமிட்டு சபரிமலைக்கு வந்துள்ளனர். இவர்கள் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்பு உள்ள வர்கள் என காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருந்தது. வல்சன் நிலங்கேரிக்கு, ஆர்எஸ்எஸ் அமைப்பில் தற்சமயம் கோவிலில் மேற்கொள்ள வேண்டிய வன்முறை நடவடிக்கைகளுக்கு பொறுப்பளிக்கப்பட்டிருந்தது.

சிபிஎம் ஊழியரான இரிட்டி பூநாடு யாகூப் கொலை வழக்கில் மேற்படி வல்சன் முதல் குற்றவாளி யாவார். இவரது தலைமையில் கும்பலாக சேர்ந்து வெடிகுண்டு, வாள், கத்தி என கொடிய ஆயுதங் களுடன் 2006 ஜுன் 13 இரவில் யாகூப்பை கொடூரமாக கொலை செய்தனர். இதில் ஆர்எஸ்எஸ் - பாஜகவினர் 16 பேர் குற்றவாளிகள். கண்ணூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணையில் உள்ளது. நவம்பர் ஒன்றாம் தேதி கடைசியாக இந்த வழக்கின் விசாரணை நடந்தது. அன்று விசாரணைக்கு செல் லாமல் வல்சன் விடுப்பு எடுத்துக்கொண்டார். அதன்பிறகு இவர் அய்யப்ப   வேடம் தரித்து சபரி மலை வந்தார்.

சோறூட்ட வந்தோருக்கு எதிராக...

இந்நிலையில், தனது பேரனுக்கு சோறூட்டும் நிகழ்ச்சிக்காக 50 வயதுக்கு மேற்பட்ட பெண் ஒருவர் செவ்வாயன்று தனது குடும்பத்தினருடன் சபரி மலைக்கு வந்திருந்தார். அந்த பெண்மணியின் வயது 52 என்றாலும் திருச்சூரைச் சேர்ந்த அவரையும், அவரது மகனையும் வல்சன் நிலங்கேரி தலைமையிலான ஆர்எஸ்எஸ் கும்பல் தாக்கியுள்ளது. அப்போது இருமுடிக்கட்டு இல்லாத வல்சன் பதி னெட்டாம் படியில் ஏறி நின்று கொண்டு வன் முறைக் கும்பலுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். பதினெட்டாம் படிக்கான மரபை மீண்டும் மீறும் வகையில் படியிறங்கவும் செய்தார். (பதினெட்டாம் படியில் திரும்பி இறங்கும் வழக்கம் இல்லை) அப்போது, வல்சனுடன் பக்கபலமாக நின்றவர் சக்கி சூரஜ் என்பவர். இவர் கண்ணூர் மாவட்டம் சக்கரக்கல் பகுதியிலுள்ள சிபிஎம் அஞ்சரக்கண்டி பகுதிக்குழு அலுவலகத்தை சூறையாடிய வழக்கில் முக்கிய குற்றவாளியாவார். தலச்சேரி டெம்பிள்கேட், மாக்கூன், கதிரூர், டயமண்ட் முக்கு, ஆரளம், பய் யனூர் ராமந்தள்ளி, கக்கம்பாற, வெள்ளூர், பானூர் சென்ட்ரல் பொயிலூர், மாடாயி வெங்கர, செங்ஙல் உட்பட கண்ணூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதி களிலிருந்து ஆர்எஸ்எஸ் குற்றவாளிகள் வல்சனின் கும்பலில் இடம்பெற்றிருந்தனர். பூநாட்டு இடது ஜனநாயக முன்னணி ஊழியர் முகம்மத், விளக்கோட்டு சிபிஎம் தலைவர் முகமது இஸ்மாயில், பூநாட்டு கோட்டத்தெகுந்நில் சிபிஎம் ஊழியர் கே.கே.யாகூப் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட காலமும் மேற்படி ஆர்எஸ்எஸ் குற்றவாளி வல்சனின் வளர்ச்சி கட்டமும் ஒன்றாகவே இருந்துள்ளது. கண்ணூரில் நடக்கும் வன்முறைசம்பவங்களுக்கான பின்னணியை இந்த கும்பலின் செயல்பாடுகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம். இந்து அய்க்கியவேதி அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர், பிரச்சாரகர் என பிரபலமாக விளங்கிய அஸ்வினிகுமார், இருட்டி பயஞ்ஞேரி முக்கில் பேருந்தை தடுத்து நிறுத்தி பாஜகவினரால் வெட்டிக் கொல்லப்பட்டதும் இக்காலத் தில்தான்.இதுபோன்ற பல குற்றங்களில் தொடர்புடைய நபர்கள் சபரிமலையின் புனிதம் காப்பதாக கூறி வன்முறையில் ஈடுபட்டுவருவது உண்மையான அய் யப்ப பக்தர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது.

சபரிமலை ஆச்சாரம் எங்கே போனது?

முதல்வர் பினராயி விஜயன் கேள்வி

சபரிமலையின் ஆச்சாரப்படி பதினெட்டாம்படி ஏற இருமுடிக்கட்டுடன் செல்லவேண்டும் எனவும், தனக்கு சபரிமலையில் செல்ல வேண்டிய வாய்ப்பு ஏற்பட்டபோது பதினெட்டாம்படிக்கு அருகில் உள்ள மற்றொரு வழியாகச் சென்றதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். ஆர்எஸ்எஸ் தலைவர் வல்சன் நிலங்கேரி பதினெட்டாம் படியில் இருமுடியில்லாமல் ஏறி இறங்கியபோது எங்கே போனது நீங்கள் கூறும் ஆச்சாரம்; எதற்காக அங்குள்ள நடைமுறையை நீங்கள் தகர்த்தீர்கள் எனவும் அவர் கேள்வி எழுப் பினார்.கேரள இடதுஜனநாயக முன்னணி அரசின்கொள்கை விளக்கப் பிரச்சார பொதுக்கூட்டம் செவ்வாயன்று (நவ.6) கோழிக்கோட்டில் நடந்தது. அலைகடலெனத் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் கேரள முதல்வர் மேலும் பேசியதாவது:

வல்சன் நிலங்கேரி போன்றவர்களுக்கு சபரிமலையின் பெருமையை நிலைநிறுத்துவதல்ல; மாறாக கலவர பூமியாக்க வேண்டும் என்பதே நோக்கம்.52 வயதுள்ள பக்தையை வன்முறையாளர்கள் தாக்கியுள்ளனர். எதற்காக அந்தஅப்பாவிப் பெண் மணியை தாக்க கிளம்பினீர்கள்?பெரிய அளவில் மோதலை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் கும்பலின் நோக்கம். காவல்துறையின் ஆரோக்கியமான அணுகுமுறையால் அது தடுக்கப் பட்டது. சபரிமலை சன்னிதானம் என்கிற நிதானம் காவல்துறையினருக்கு இருந்தது. கடவுள் நம்பிக் கையாளர்களின் நம்பிக்கையை பாதுகாக்க இடது ஜனநாயக முன்னணி உறுதி பூண்டுள்ளது.

வழக்குரைஞரான பாஜக தலைவர் சிறீதரன் பிள்ளை போன்றவர்களின் போதனையைக் கேட்டதால் சபரிமலை தந்திரிகள் படும் பாடு என்ன என்பதை பார்க்க வேண்டும். சட்ட ஆலோசனை பெறவில்லை என தந்திரி கூறியது நல்லது. அதே நேரத்தில் ஏற்கெனவே அதுபோன்று கூறியிருந்தால் அது சபரிமலையின் நன்மைக்காக அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சபரிமலை மூடிவிட வேண்டும் என்பது சங்பரிவாரின் தேவை. முன்பு இவர்களுக்கு துணை நின்றவர் (ராகுல் ஈஸ்வர்) ரத்தமும் சிறுநீரும் கழித்து கோயில் நடையை அடைக்கச் செய்ய முயற்சிப்பதாக கூறியிருந்தார்.வழிபாட்டுத் தலத்தைத் தகர்க்க திட்டமிடுபவர்களின் கையில் யாரும் கருவியாகிவிடக் கூடாது. பெரு வெள்ளத்தின்போது துயரம் அனுபவித்தவர்களுக்கு புகலிடம் அளிக்கும் மய்யங்களாக கேரளத்தின் பல வழிபாட்டுத்தலங்களும் மாறியதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

யார் இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்? எல்லோரும் அங்கு சென்றார்கள். அனைவருக்கும் வழிபாட்டுத் தலங்கள் புகலிடம் அளித்தன. இயல்பாகவே மிக உயர்ந்த மதச்சார்பற்ற மனம் கேரளத்தில் உள்ளது. அதைத் தகர்க்க அனுமதிக்க முடியாது. முன்பு கேரளத்தில் பெரும் தீண்டாமை நிலவியது. அத்தகைய தீண்டாமைக்கு ஆதரவாக நின்றவர்கள் ஆர்எஸ்எஸ்காரர்கள். அதன்பிறகு மறுமலர்ச்சி காலத்தில் இங்கு ஏற்பட்ட மாற்றங்களில் மட்டுமல்ல, இந்திய விடுதலையிலும்கூட பங்கு வகிக்காதவர்கள் ஆர்எஸ்எஸ்காரர்கள். இடது ஜனநாயக முன்னணி சார்பில் இதுபோன்ற கூட்டங்கள் பெரும்பாலான மாவட்டங்களில் நடத்தப்பட்டு விட்டன. முன்பு நடந்த கூட்டத்தைவிட பெரும் கூட்டம்அடுத்த கூட்டத்திற்கு வருவதைக் காண முடிகிறது. இது ஏதோ தற்செயலான ஒரு நிகழ் வல்ல. மறுமலர்ச்சி கால போராட்டங்களின் தொடர்ச்சி.இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner