எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காந்திநகர், ஜூலை 12 படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரி  வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி முதல் கடைசியாக காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்த உள்ளதாக அர்திக் படேல் கூறி உள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் கூறி இருப்பதாவது: தன்னுடைய சமூகத்தின் உறுப்பினர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்று தருவதே முக்கிய கவலையாக உள்ளது. இவ்விவகாரத்தில் என்னுடைய வாழ்வை கொடுப்பேன் என கூறி உள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டில் படேல் சமுதா யத்தை சேர்ந்தோர் அரசாங்க வேலைகள் மற்றும் கல்வித் துறைகளில் சமூக உறுப்பினர்களுக்கு இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். பேரணி ஒன்றிற்கும் ஏற்பாடு செய்திருந்தார். பேரணியின் முடிவில் வன்முறை வெடித்தது. தொடர்ந்து ஹர்திக் படேலை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர், இந்த வன்முறையில் சுமார் 14 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் கடைசி கட்ட போராட்டமாக வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி முதல் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும்,நாங்கள் இட ஒதுக்கீட்டைப் பெறுவோம், எனவும் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner