எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

செங்கோட்டை, ஜூலை 12 எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு செங்கோட்டை யில் இருந்து கொல் லத்துக்கு பயணிகள் ரயில் சேவை திங்கள் கிழமை தொடங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு மீட்டர்கேஜ் பாதையில் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்தப் பாதையை அகலப் பாதையாக மாற்று வதற்காக, கடந்த 2010ஆம் ஆண்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டு அகலப் பாதை பணிகள் தொடங்கியது.

இந்தப் பணிகள் சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இந்த வழித்தடத்தில் சோதனை ஓட்டம் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடைபெற்றது.

தொடர்ந்து வாரம் இருமுறை தாம்பரம் - கொல்லம் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், செங்கோட்டை - கொல்லம் இடையிலான பயணிகள் ரயில் சேவை திங்கள்கிழமை தொடங்கியது.

இந்த ரயில் தினமும் காலை 11.20-க்கு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு மதியம் 2.30-க்கு கொல்லம் சென்றடையும்.

மறு மார்க்கத்தில் தினமும் காலை 10-30-க்கு கொல்லத்திலிருந்து புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு செங்கோட்டை வந்தடையும்.

செங் கோட்டையிலிருந்து புனலூருக்கு ரூ.15ம், கொல்லத்திற்கு ரூ.30-ம் கட்டணமாக நிர்ணயிக் கப்பட்டுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner