எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடியாத்தம், ஜூலை 12 குடி யேற்றம் புவனேஸ்வரிப் பேட்டை, லிட்டில் ஃபிளவர் மெட்ரிக். மேல் நிலைப் பள் ளியில் 30.6.2018 அன்று மாலை 3 மணிக்கு அன்னை மணியம் மையார் அரங்கத்தில் அம்பேத் கர் பெரியார் வாசகர் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திராவிடர் இயக்கத்தின் தோற்றுனர் சர் பிட்டி தியாகராயர் நினைவு நாள், சமூகநீதிக் காவலர் முன் னாள் பிரதமர் வி.பி.சிங் அவர் களின் பிறந்த நாள், புரட்சியாளர் சேகுவேரா பிறந்தநாள் ஆகி யோரின் படத் திறப்புகளுடன் அவர்களின் நினைவுகள் போற் றப்பட்டது.

பள்ளித் தாளாளர் வி.சட கோபன் தலைமை தாங் கினார். பள்ளிச் செயலாளர் இரம்ய கண்ணன் முன்னிலை வகித் தார். பள்ளி மூத்த முதல்வர் தி.வனரோஜா வரவேற்புரை யாற்றினார் பள்ளி முதல்வர் எல்.ஜமுனா, சங்கத் தலைவர் தமிழாசிரியர் எம்.சதானந்தன், ஆசிரியை பி.சுஜாதா ஆகியோர் ஒருங்கி ணைத்தனர்.

மாணவர்கள் முப்பெரும் தலைவர்களின் போற்றும் விதமாக அவர்களின் வரலாறு களை உரையாக கட்டுரையாக, கவிதையாகவும், உண்மை இத ழில் வெளிவந்த சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களில் வரலாற்றினையும் வாசித்து உரையாற்றினர். அனைவருக் கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களை வாழ்த்தி, வள்ளலார் கல்வியியல் கல்லூரி முதல்வர்  டி.என்.அகிலன், ஓய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியர் திரு ஞானசம்பந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங் கினர். பள்ளித் தாளாளரும், வேலூர் மண்டல கழகத் தலை வருமான வி.சடகோபன் தமது உரையில்: சர் பிட்டி தியாக ராயரின் தன்னலமற்ற தொண் டினையும், சமூக நீதிக்காவலர் அவர்களின் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு கழகத் தோழர்கள் வரிசையில் நின்று சிறுநீரகக் கொடை அளிக்க முன்வந்ததை வி.பி.சிங் அவர்கள் கண்ணீரு டன் பெரியார் தொண்டர்களின் தியாக உள்ளத்திற்கு நெக்குருகி நன்றி தெரிவித்ததையும் தமிழர் தலைவரிடமும், கழகத்தினர் மீதும் அளவில்லா அன்பு பாராட்டியதையும், மண்டல் கமிஷன் அமுலாக்கத்திற்காக தனது பிரதமர் பதவியையே துறந்த வரலாற் றையும் விளக்கி கூறினார்.

அதோடு திராவிடர் கழகத் திற்கு முன்னமேயே திராவிட மாணவர் கழகம் தொடங் கப்பட்ட வரலாற்றினையும் குறிப்பிட்டார். குடந்தை மாநாட்டிற்கு பள்ளிச் செயலாளர் இரம்யா கண்ணன் ரூ.500, பெரியார் பிஞ்சுகள் ஆர்.கே.இனியன் ரூ.100-, வி.சி.சங்கநிதி ரூ.100-, மேலும் 3 மாணவர்கள் ரூ.300- என மொத்த ரூ.1000- வேலூர் மண்டல தலைவர் வி.சட கோபன் அவர்களிடம் நன் கொடையாக வழங்கினர்.

இறுதியாக அம்பேத்கர்-பெரி யார் வாசகர் வட்ட செயலாளர் செல்வி எஸ்.சித்ரா நன்றி கூறி னார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner