எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கிருஷ்ணகிரி, ஜூலை 12 பெரியார் பெருந்தொண்டர் ஜி.வி.வெங்கட்ராமன் அவர்களின் இறுதி நிகழ்வில் மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட தலைவர் மு.துக் காராம் தலைமையில் இரங் கல் கூட்டம் நடைபெற்றது.

தருமபுரி மண்டலத் தலைவர் பெ.மதிமணியன், பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், மாவட்ட அமைப்பாளர் ப.முனுசாமி, மாவட்ட துணைச் செயலாளர் அ.செ.செல்வம், கிருட்டின கிரி நகர தலைவர் மே.மாரப்பன், வழக்குரைஞர் மணிமொழி, பத்திரிக்கையாளர் மூதுரை பொய்யாமொழி, வெங்கட்ராமன் உறவினர்கள் சேலம் செல்வராஜ், தமிழ்நாடு மின்சார பொறியாளர் செல்வ ராஜ், அன்பு, வேணுகோபால், குமார், மாவட்ட இணைச் செயலாளர் சு.வனவேந்தன், தலைமை கழக பேச்சார் பழ.வெங்கடாசலம், மாநில மகளிரணி, மகளிர் பாசறை அமைப்பாளர் தகடூர் தமிழ் செல்வி, ஆட்டோ ராஜா, ஆகியோர் இரங்கல் உரைக்கு பின் தலைமைக் கழகம் சார்பில் மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெய ராமன் உரையாற்றுகையில்.

வெங்கட்ராமன் அவர்கள் வாழ்ந்த வரை பெரியார் கருத்துகள் இப்பகுதியில் பரவிட எவ்வளவு உதவியாக இருந்தாரோ தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் இருந்திடவும், வெங்கட்ராமன் அவர்கள் இயக்கத்தின் மீது கொண்டுள்ள பற்றை விளக்கி பேசி அவரது உடலுக்கு மாலை வைத்து இறுதி மரி யாதை செலுத்தப்பட்டு கழக தோழர்கள் அவரது உடலை சுமந்து சென்று மயானத்தில் அடக்கம் செய்தனர். இந் நிலையில் வெங்கட்ராமன் அவர்களின் மகன் குமார் (தமிழ்நாடு மின்சார வாரியம் கோட்ட பொறியாளர் ஓய்வு) மற்றும் அவரது குடும்பத்தின ருக்கு கழக தோழர்களும், உறுப்பினர்களும், நண்பர் களும் ஆறுதலை தெரிவித்த னர்.

இந்நிகழ்ச்சியை கிருட்டினகிரி நகர கழகத்தின் சார்பில் நகர செயலாளர் க.மாணிக்கம் ஒருங்கிணைத்து செய்திருந்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner