எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

இசுலாமாபாத், ஜூலை 12- பனாமா ஆவண ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும், அவரது மகள் மரியம் நவாஸும் பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

லண்டனில் குடியிருப்பு வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில், நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகளும், மரியமுக்கு 7 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், தற்போது லண்டனில் இருக்கும் அவர்கள் பாகிஸ்தான் திரும்பும்போது விமான நிலையத்திலேயே கைது செய்யப் படுவார்கள் என்று பாகிஸ்தான் இடைக்கால அரசு தெரிவித்தது.

எனினும், வரும் வெள்ளிக்கிழமை தாங்கள் நாடு திரும்பு வதாக நவாஸும், மரியமும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அவர்கள் பாகிஸ்தானுக்கு வந்த பிறகு, மீண்டும் நாட்டை விட்டு வெளியேற முடியாத வகையில் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு சண்டையில் பெண்கள்,

சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமைகள் அய்.நா. அதிர்ச்சி தகவல்

ஜெனிவா, ஜூலை 12- தெற்கு சூடானில் அரசுப் படைக் கும் கிளர்ச்சிப் படைகளுக் கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடை பெற்று வருகிறது. கிளர்ச் சிப் படைகளிடம் உள்ள கிராமங்களை கைப்பற்றுவ தற்காக அரசுப் படைகள் மற்றும் ஆதரவு படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த சண்டையின்போது போர் விதிமீறல்கள் நடைபெறுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், தெற்கு சூடானில் உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட விளைவுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து அய்.நா. மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

அந்த அறிக்கையில், தெற்கு சூடானில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கிராமங்கள் மீது அரசுப் படைகள் மற்றும் அதன் ஆதரவு படைகள் தாக்குதல் நடத்தியதில் 232 பேர் கொல்லப்பட்டதாகவும், தாக்குதலின்போது 120 பெண்கள் மற்றும் சிறுமிகள் வன்கொடுமையில் உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூனைட்டி மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் மே 24-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த அட்டூழியங்களுக்கு மூன்று ராணுவ கமாண்டர்களே பொறுப்பாளிகள் என அய்.நா. விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner