எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சியோல், ஜூலை 12- வட கொரி யாவுடன் நல்லிணக்கப் பேச்சு வார்த்தையை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாக, அந்த நாட்டுக்கு எதிராக ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வரும் பொதுமக்கள் போர் ஒத்தி கையை தென் கொரியா நிறுத்தி வைத்துள்ளது.

இதுகுறித்து தென் கொரிய உள்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புத் துறை அமைச்சர் கிம் பூ-கியூம் கூறியதாவது:

வட கொரியாவுடன் போர் ஏற்பட்டால், அத்தகைய சூழலை பொதுமக்கள் எதிர் கொள்வதற்காக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்த போர் ஒத் திகை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

அந்த நாட்டுடன் தற்போது நடந்து வரும் நல்லிணப் பேச்சு வார்த்தைகளுக்கு ஏற்ற சூழலை உருவாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, வட கொரியா வுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொள்ளப் பட்டு வந்த வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சி நிறுத்திவைக் கப்பட்டதைப் போலவே, பொது மக்கள் போர் ஒத்திகையும் நிறுத்தி வைக்கப்படுகிறது என்றார் அவர்.

தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு அச்சுறுத் தலை ஏற்படுத்தும் வகையில், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவு கணை சோதனைகளை வட கொரியா கடந்த ஆண்டின் இறுதி வரை தொடர்ந்து நடத்தி வந்தது.

இதற்குப் பதிலடியாக, வட கொரியா மீது அமெரிக்கா கடு மையான பொருளாதாரத் தடை களை விதித்தது. இதனால், வட கொரியாவுக்கும், அமெ ரிக்க-, தென்கொரிய கூட்டணிக் கும் இடையே கடும் பதற்றம் நிலவி வந்தது. இந்தச் சூழலில், தென் கொரியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து, இரு கொரிய நாடு களுக்கும் இடையே பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் வட கொரிய அதிபர் கிம் ஜோங்கின் சந்திப்பு சிங்கப்பூரில் கடந்த மாதம் 12-ஆம் தேதி நடைபெற்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner