எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

வாசிங்டன், ஜூலை 12- சீனாவில் இருந்து 200 பில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதி செய் யப்படும் பொருள்கள் மீது 10 சதவீதம் வரி விதிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கி யுள்ளதாக அமெரிக்கா அறிவித் துள்ளது.

(200 பில்லியன் டாலர்கள் என்பது இந்திய மதிப்பில் ரூ.13.76 லட்சம் கோடியாகும்) அமெரிக்க ஏற்றுமதி பொருள் களுக்கு வரி விதிக்கும் சீன அரசின் முடிவுக்கு எதிராக, அமெரிக்கா முன்னெடுத்துள்ள இரண்டாவது வரி விதிப்பு நட வடிக்கை இதுவாகும். இதனால், இரு பொருளாதார வல்லரசு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போர் மேலும் தீவிர மடைந்துள்ளது.

முன்னதாக, அமெரிக்கா வில் இருந்து 34 பில்லியன் டாலர் அளவுக்கான இறக்கும திக்கு வரி விதிக்கப்படுவதாக சீனா அறிவித்தது. மேலும், 16 பில்லியன் டாலர் அளவுக்கான இறக்குமதிக்கும் வரி விதிக்க வுள்ளதாக சீனா எச்சரித்திருந் தது.

சீனாவின் இந்த திடீர் அறிவிப்பால், அமெரிக்கா அதிர்ச் சிக்குள்ளானது. இதற்கு பதி லடி கொடுக்கும் நடவடிக்கை களை அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர் வாகம் தொடங்கியது. இதன் படி, சீனாவில் இருந்து 34 பில் லியன் டாலர் அளவுக்கு இறக் குமதி செய்யப்படும் பொருள் கள் மீது 25 சதவீதம் வரி விதிக் கப்படுவதாக அமெரிக்கா கடந்த 6-ஆம் தேதி அறிவித்திருந்தது.

இந்நிலையில், சீனா மீதான கட்டுப்பாடுகளை மேலும் அதி கரிக்கும் வகையிலான இரண் டாவது கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியுள்ளது. இதன்படி, சீனாவில் இருந்து 200 பில்லி யன் டாலர் அளவுக்கான இறக்குமதிக்கு 10 சதவீத வரி விதிக்கும் நடவடிக்கையை தொடங் கியிருப்பதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அமெரிக்க வர்த்தக அமைப்பின் பிரதிநிதி ராபர்ட் லைட்சர் கூறியதாவது:

அமெரிக்க ஏற்றுமதி மீதான வரி விதிப்பு நடவடிக்கையை, எந்தவொரு சர்வதேச சட்ட அடிப்படையும், நியாயமும் இன்றி சீனா மேற்கொண்டது. நியாயத்துக்கு புறம்பான இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிடுமாறு டிரம்ப் அரசு பல ஆண்டுகளாக சீனாவை பொறு மையாக வலியுறுத்தி வந்தது.

சீனா மேற்கொள்ள வேண் டிய குறிப்பிடத்தக்க மாற்றங் கள் குறித்து நாங்கள் விரிவாக எடுத்துரைத்துவிட்டோம். ஆனால், கெட்டவாய்ப்பாக சீனா தமது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளாமல் அமெ ரிக்க பொருளாதாரத்தை ஆபத் தில் நிறுத்தியது. எங்களது சட் டப்பூர்வ கோரிக்கைகளை கருத் தில் கொள்ளாமல், அமெரிக்க பொருள்கள் மீதான வரி விதிப்பை சீனா அதிகப்படுத் தியது. அதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

இதன் விளைவாக, சீனா வில் இருந்து 200 பில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 10 சதவீதம் வரி விதிக்குமாறு அமெரிக்க வர்த்தக அமைப் புக்கு அதிபர் டிரம்ப் உத்தர விட்டார். சீனாவின் அபாயகர மான வர்த்தக கொள்கைகளுக்கு இது தக்க பதிலடியாகும் என்றார் லைட்சர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner