பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
சென்னை, ஜூலை 12 கடந்த 1.7.2018 அன்று மாலை 4.30 மணியளவில் சென்னை பெரி யார் திடலில் வட சென்னை, தென்சென்னை, தாம்பரம், ஆவடி, கும்முடிப் பூண்டி ஆகியமாவட்டங்களின் பொறுப்பாளர்கள் கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது. மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையேற்றார். கூட்டத் தில் கலந்துகொண்டவர்களை வரவேற்று வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழ கத் தலைவர் கோவி.கோபால் உரையாற்றினார்.
மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அ.தா. சண்முக சுந்தரம் கடவுள் மறுப்பு உறுதி மொழியை கூற கலந்துகொண்ட தோழர்கள் வழி மொழிந்தனர் .
வந்திருந்த பொறுப்பாளர் கள் தங்களை அறிமுகப்படுத் திகொண்டு, கடந்த மூன்று மாதங்களின் செயல் பாட்டை யும், அடுத்த மூன்று மாதங் களின் செயல் திட்டங்களையும் கூறினார்கள்.
மாநில துணைத் தலைவர் மா. ஆறுமுகம் அவர்கள், வட சென்னை, ஆவடி, கும்முடிப் பூண்டி மாவட்டங்களின் கடந்த மூன்று மாத செயல் களையும், அடுத்து எப்படி இருக்கவேண்டும் என்பதையும் விளக்கினார்.
மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அ.தா. சண்முக சுந்தரம் தாம்பரம், தென் சென்னை குறித்து தனது ஆய்வினை எடுத்துரைத்தார்.
மாநில பகுத்தறிவாளர் கழ கப் பொதுச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் தனது உரை யில்,
பகுத்தறிவாளர் கழகத்தின் நோக்கங்களையும், அதன் வளர்ச்சி குறித்தும் விளக்கி பேசினார். ஒவ்வொரு மாவட் டமும் மாதந்தோறும் கலந்து ரையாடல் நடத்த வேண்டும், உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும், மாடர்ன் ரேஷனலிஸ்ட் சந்தா சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத் தினார். யார் யாரை எல்லாம் சேர்க்கலாம் என்பது குறித்தும் விளக்கினார்.
இறுதியாக மாநில மாண வர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் கருத்து ரையாற்றினார். சமூக வலைத் தளங்களை பயன்படுத்துவது, பகுத்தறிவாளர் கழகத்தினை துவக்கி வைத்து தந்தை பெரி யார் உரையாற்றியது என பல் வேறு தகவல்களை விளக்கி னார். தென் சென்னை மாவட் டத் தலைவர் மு.இரா.மாணிக்கம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
கூட்டத்தில் வடசென்னை மாவட்டத் தலைவர் கோவி. கோபால், செயலாளர் பா.இராமு, துணை செயலாளர் இரா.சண்முகநாதன், தென் சென்னை மாவட்டத் தலைவர் மு.இரா.மாணிக்கம், தாம்பரம் மாவட்டத் தலைவர் ந.விஜய் ஆனந்த், கும்முடிப்பூண்டி மாவட்டத் தலைவர் டி.இரு தயராஜ், ஆவடி மாவட்டத்து தலைவர் ப.ரா. இராமதுரை , ஆவடி மாவட்ட செயலாளர், வே.பன்னீர் செல்வம், மற்றும் தோழர்கள் மு.லோகு, மு.முத்துக்குமார், ந.சு.இராச மோகன், எஸ்.சிவகுமார், எம்.இளங்கோவன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.