எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மேட்டூர், ஜூலை 12- கருநாடக மாநிலம் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையின் கார ணமாக அங்குள்ள கபினி மற் றும் கிருஷ்ணராஜசாகர் அணை களுக்கு நீர்வரத்து அதிகரித்துள் ளது. அணைகளின் பாதுகாப்புக் கருதி உபரி நீர் திறக்கப்பட் டுள்ளது. உபரி நீர் கடந்த இரு நாள்களாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக செவ் வாய்க்கிழமை காலை அணைக்கு நொடிக்கு 14,334 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, புதன்கிழமை காலை 32,284 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால், செவ்வாய்க்கிழமை காலை 65.15 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன் கிழமை காலை 68.42 அடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட் டம் ஒரே நாளில் 3.27 அடி உயர்ந்தது. புதன்கிழமை மாலை யில் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியது. அணையி லிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 31.36 டி.எம்.சியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு இதே நிலையில் இருந்தால், ஒரு வார காலத்தில் அணையின் நீர்மட்டம் 90 அடியாக உயரும். அப்போது சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் வாய்ப்பு ஏற்படும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner