எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

 

 

புதுடில்லி, ஜூலை 12- இந்தியாவில் இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 34 சதவிகிதம் அளவிற்கு அதிகரித்துள்ளதாக அமெரிக் கன் காலேஜ் ஆப் கார்டியாலஜி என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதே காலகட்டத்தில், அமெரிக்காவில் இதய நோய் பாதிப்பால் ஏற்படும் மரணம் 41 சதவிகிதம் குறைந்திருப்ப தாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.1990-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டுவரை, இதயத்தைப் பாதிக்கும் கார்டியோ வாஸ்குலார் நோய்த் தாக்குதல் மூலமான இறப்பு விகிதம் அமெரிக்காவில் 41 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால், இந்தியாவில் 34 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஒரு லட்சம் பேரில், 115 முதல் 209 பேர் வரை இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு மரணம் அடைகின்றனர். 2016-ஆம் ஆண்டில் இந்தியாவில் 65 லட்சத்து 50 ஆயிரம் பேரும், அமெரிக்காவில் 12 லட்சத்து 70 ஆயிரம் பேரும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்துள்ளனர்.

குறிப்பாக, 30 முதல் 69 வயது வரையிலானவர்கள் குறிப்பிட முடியாத நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்;  அவற்றில் முக்கியமானதாக இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருக்கின்றன. இந்தியாவில் இதய நோய்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலம் பஞ்சாப். குறைந்த அளவில் பாதிக்கப்பட்ட மாநிலமாக மிசோரம் உள்ளது. இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்

தேசிய மனித உரிமைகள் ஆணைய

2 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது

புதுடில்லி, ஜூலை 12- தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். 100-ஆவது நாள் போராட்டத்தில் பேரணியாக சென்று ஆட்சியரிடம் மனு கொடுப்பதாக இருந்தது. அப்போது வன்முறை வெடித்ததால் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியானார்கள்.

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு நேரடி கள ஆய்வில் ஈடு பட்டது. அந்த குழு அளித்த அறிக்கையில், அதிகப்படியான மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பதாக சுட்டிக்காட்டியதை அடுத்து ஆணையத்தின் 2 நீதிபதிகள் அமர்வு வழக்கை விசா ரணைக்கு எடுத்துக் கொண்டது.

மிக முக்கியமான வழக்குகளை மட்டும் தான் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 2 பேர் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதமே விசா ரணை தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத் தரவு பிறப்பித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner