எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரை!

அமெரிக்கா - பெரியார் பன்னாட்டமைப்பு சார்பில் 15.5.2018 அன்று இரவு 8.30 மணி முதல் 10 மணிவரை டெலிகான்பிரன்ஸ் எனும் பல்வழி அழைப்புக்கூட்டம் நடை பெற்றது. பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் தொடங்கி வைத்துப் பேசினார். அம்பேத்கர், பெரியார் படிப்பு வட்டத்தைச் சேர்ந்த கழகத்தோழர் எம்.வி.கனிமொழி அறிமுக உரையாற்றினார்.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் "இன்றைய தமிழகம்" எனும் தலைப்பில் ஒரு மணி நேரம் சிறப்புரையாற்றினார். தமிழகத்தை இன்றைய சூழலில் உலுக்கிக் கொண்டி ருக்கும் பல்வேறு பிரச்சினைகளைப் பற் றியும், அவற்றிற்குஎதிராக போராடிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் மக்கள் குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் போராட்ட உணர்வைப் பற்றியும், வருமுன் காக்கும் இயக்கம்போல் திராவிடர் கழகமும், அதன் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் செயலாற்றி வருவதை யும், மத்திய மதவாத மோடி அரசால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் தமிழர் விரோத - மக்கள் விரோத திட்டங்களைப் பற்றியும், சமூகநீதிக்கெதிரான சூழ்ச்சி வலைகள் பற்றியும், முன்னதாக அறிவித்து போராட் டத்துக்கு அனைத்துக் கட்சியினரையும் வழிப்படுத்தும் முறைமைகள் பற்றியும் தமது உரையில் குறிப்பிட்டார். குறிப்பாக நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ள பேரிழப்புகள், ஸ்டெர்லைட், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் பேரழிவு திட்டங்கள், தொழிற்சாலைகள் உருவாக்கியுள்ள கேடுபாடுகள் குறித்தும், காவிரி நீர் பிரச்சினை குறித்தும் பேசினார்.

அவரின் உரைக்குப்பின் கேள்வி நேரம் தொடர்ந்தது. தொடர்பிலிருந்தவர்களில் சிலர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையிறுத்திப் பேசினார் பொதுச் செயலாளர்.

சரியாக ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்நிகழ்ச்சி இன்றைய தமிழகத்தின் இருப்பை எடுத்து இயம்புவதாக அமைந் தது. கழகம் மற்றும் கழகத்தலைவரின் தொண்டினை நினைவு கூறுவதாகவும் அமைந்தது. வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் முன்னாள் தலைவர் நாஞ்சில் பீட்டர், வாசிங்டன் தமிழ்ச்சங்கத்தைச்சேர்ந்த மயிலாடுதுறை சிவா, வழக்குரைஞர் கனிமொழி, நியூசெர்சியை சேர்ந்த பிரதாப், சேன்டிலி (வர்ஜீனியா) மேரிபொன்முடி, ஹண்டனைச் சேர்ந்த அருணா, பொறியாளர் எழில்வடிவன், பொறியாளர் அறிவுப் பொன்னி, திருமதி. இளங்கோவன், கலைச் செல்வி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வை ஒருங்கிணைத்த இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner