எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஜூலை 12- சிலை கடத்தல் வழக்கை சி.பி.அய். விசாரணைக்கு ஏன் மாற்றக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் புராதன மற் றும் பழமையான கோவில்க ளில் உள்ள சிலைகள் கடத்தப் பட்டது. இவற்றை, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் அதிகாரிகளே கடத்தி, சர்வதேச கடத்தல் கும்பலிடம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகா தேவன், அய்.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்பு படையை உருவாக்கினார்.

பின்னர் கும்பகோணம் தலைமை மாஜிஸ்திரேட்டு நீதி மன்றத்தை சிறப்பு நீதிமன்ற மாக அறிவித்தார். தமிழகம் முழுவதும் காணாமல் போன சிலைகள் குறித்து இந்த தனிப் படை விசாரிக்க உத்தரவிட்டார். இந்த வழக்கு சென்னை நீதி மன்ற நீதிபதி மகாதேவன் முன்பு கடந்தமுறை விசார ணைக்கு வந்தபோது, கோவில் சிலைகளை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை உள் ளிட்டவை தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப் பித்த உத்தரவை அமல்படுத்த வில்லை என்று நீதிபதி கருத்து கூறியிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு புதனன்று (ஜூலை 11) விசாரணைக்கு வந்தது.அப் போது நீதிபதி மகாதேவன், தமிழகத்தில் சிலைத் திருட்டு என்பது தொடர்ந்து கொண்டி ருக்கிறது. இதே நிலை நீடிக்கு மானால் சிலை கடத்தல் தொடர் பான வழக்கை சி.பி.அய். விசாரணைக்கு ஏன் மாற்றக் கூடாது? என்று கேள்வி எழுப் பினார்.

ரங்கராஜன் நரசிம்மன் என் பவர் எழுந்து, சிலை கடத்தல் வழக்கை நீதிமன்றம் விசாரித்து கொண்டிருக்கும் பொழுதே அண்ணாமலையார் பஞ்சலோக சிலை காணாமல் போய்விட் டது. சிறீரங்கம் கோவில் சிலை கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இமெயில் மூலம் பல புகார் களை அரசுக்கு அனுப்பியும் எந்த பயனும் இல்லை என்று குற்றம்சாட்டினார்.இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பிளீடர் மகாராஜனிடம் கருத்து கேட்ட நீதிபதி, பின்னர் இதுகுறித்து பதில் மனு தாக் கல் செய்ய உத்தரவிட்டு, விசா ரணையை ஒத்திவைத்தார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner