எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பெங்களூரு, ஜூன் 14 கருநாடக மாநிலம், பெங்களூருவில் நடை பெற உள்ள மண்டல அளவிலான திறன் போட்டியில் கலந்து கொள்ள தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு திறன் மேம் பாட்டுக் கழகம் சார்பில் சென் னை, கிண்டியில் உள்ள மேம் படுத்தப்பட்ட பயிற்சி நிலை யத்தில் கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் (ஜூன் 9,10) மாநில திறன் மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்ற சிறந்த திறன் படைப்புகள் காட்சிப் படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, மாநாட்டு நிறைவு விழா திங்கள்கிழமை நடை பெற்றது.

இதில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா செட்டியார் பாலிடெக்னிக் கல்லூரி, திருநெல் வேலி மாவட்டம், தென்காசி ஜே.பி. பொறியியல் கல்லூரி, ராமநாதபுரம் மாவட்டம், பல் கலைக்கழக பொறியியல் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களின் மாணவர்களுக்கும், சென்னை யைச் சேர்ந்த மக்லே என்ஜின் காம்பொனன்ட்ஸ், மதுரையைச் சேர்ந்த டி.வி.எஸ். சமுதாயக் கல்லூரி, சேலத்தைச் சேர்ந்த வின் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பணி யாளர் குழுவினருக்கு முதல் பரிசாக தலா ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, திங்கள், செவ்வாய்க்கிழமை தனித்திறன் தேடல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 66 பேர் கலந்து கொண்டனர்.

இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட 14 பேர், கருநாடக மாநிலம், பெங்களூருவில், வரும் 21 -ஆம் தேதி முதல் 23 -ஆம் தேதி வரை நடைபெறும் மண்டல அளவி லான திறன் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். அதில், வெற்றி பெறுபவர்கள் ஜூலை மாதம் டில்லியில் நடைபெறும் தேசிய அளவிலான திறன் போட்டியில் கலந்து கொள்வர் என தமிழ்நாடு திறன் மேம் பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner