எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஜூன் 14 குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்ப தற்காக, குழந்தைகளுக்கான அவசர உதவி எண் (1098) சேவையை மேலும் 435 இடங்களுக்கும் முக்கிய ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தி மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 12) கடைப்பிடிக்கப்பட்டது. குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்காக, கடந்த 2002-ஆம் ஆண்டில் இருந்து இந்த தினம் கடைப்படிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சகம் சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆபத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு உதவுவதற்கான அவசர உதவி எண் சேவை, மேலும் 435 இடங்களுக்கும் முக்கிய ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பில் முக்கியப் பங்காற்றும் என நம்புகிறோம்.

குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்துவது குற்றச் செயலாகும். குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான எங்களது பிரசார இயக்கத்தில் பொதுமக்கள் அனைவரும் இணைய வேண்டும்; குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று அந்த பதிவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2011 நிலவரப்படி சுமார் 1 கோடி குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாக யுனிசெஃப் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இதில் பெண் குழந்தைகள் 45 லட்சம் பேர் உள்ளனர். கிராமப்புற பகுதிகளில் 80 லட்சம் குழந்தை தொழிலாளர்களும், நகர்ப்புற பகுதிகளில் 20 லட்சம் குழந்தை தொழிலாளர்களும் உள்ளதாக யுனிசெஃப் ஆய்வு கூறுகிறது.

ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கான அனுமதியை திரும்பப் பெற்றது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை, ஜூன் 14 தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடியவர்கள் மீது கடந்த மாதம் 22ஆம் தேதி காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர்.

தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு கடந்த 2016ஆம் ஆண்டு வழங்கிய அனுமதியை திரும்பப் பெறுவதாக தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நேற்று அறிவித்துள்ளது. ஏற்கனவே, ஆலை விரிவாக்கத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner