எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஜூன் 14- இந்தியாவில் முன்னணி நுகர்வோர் அமைப்பு களில் ஒன்றான கன்சியுமர் வாய்ஸ் (Consumer Voice) மூலம் இந்தியாவில் 15 மாநிலங்களில் விற்கப்படும் தளர்வான சமையல் எண்ணெய்களில் 85 சதவீதம் வரை கலப்படம் செய்யப்பட்டுள் ளது என உறுதி செய்யப்பட்டுள் ளது.

இந்த ஆய்வு மேலும் 8 வகைகளில் கடுகு, எள், தேங்காய், சன்பிளவர், பாம்ஓலின், சோயா பீன், கடலை மற்றும் கோட்டான் சிட் ஆகியவற்றிலும் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என தெரி விக்கிறது என இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் குறித்து டாக்டர் அபர்ணா சந்தானம் (டெர்மடா லஜிஸ்ட் மற்றும் காஸ் மெடால ஜிஸ்ட்) தெரிவித்துளளார். வாங்கு பவர்கள் தங்கள் தோலிலும், முடி யிலும் பயன்படுத்தும் தயாரிப்புக ளைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும். தோல் மிகவும் முக்கி யமான உறுப்புகளில் ஒன்றாக இருப்பதுடன், சிறிய கலப்படம் கூட எரிச்சலை ஏற்படுத்தும் காலப்போக்கில் இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

கட்டுமான திட்டங்களுக்கு

புத்தாக்கமான சிமெண்ட்

சென்னை, ஜூன் 14- கட்டுமான திட்டங்களுக்கான சிறந்த கனிம கலைவைப் பொருள்களைக் கொண்டு புத்தாக்கமான செயல் திறனில் தயாரிக்கப்பட்ட நிலைக் கத்தக்க எதிர்காலத்திற்கு தேவை யான மஹா HD+ என்ற சிமெண்டை சென்னையில் 12.6.2018 அன்று மை ஹோம் (My Home Group) தொழிலக மேலாண்மை இயக்கு நர் ரஞ்சித் ராவ் ஜூபாலி அறி முகப்படுத்தி உள்ளார்.

அது மக்னீசியா, சல்ஃபர், காரங்கள் மற்றும் குளோரைடு போன்ற மிகவும் கெடுதல் குறைந்த சேர்க்கைப் பொருள் களுடன் உயர்தரம் வாய்ந்த எரி சாம்பலைப் பயன்படுத்தி உற் பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இது கட்டுமான நிலவமைப்பிற்கும் மற்றும் அதற்கு அப்பாற்பட்டும் அனுகூலமான விளை பயன் களை கொண்டுவரும். மேலும் இது கடலோர கட்டுமானங்க ளுக்கு சிறந்தவையாகும் என இந்நிறுவன சந்தைப் பிரிவு தலை வர் விஜய் வர்தன் ராவ் தெரிவித் துள்ளார்.

ஊட்டச்சத்துக்களை அளிக்கும் உணவகம் தொடக்கம்

சென்னை, ஜூன் 14- குழந்தைகள் மற்றும் இளைஞர்களில் உடல் நலத்திற்கு ஊட்டச்சத்துக்களை வழங்கம் பெர்ரி பழத்தால் தயா ரிக்கப்பட்ட மற்றும் பல்வேறு சத்து நிறைந்த உணவு வகைகளை கொண்ட லண்டன் டபுள் (LONDON BUBBLE CO) நிறுவனத்தின் தமிழகத்தின் முதல் "வாஃபிள்ஸ்" உணவக கிளையை சென்னை கீழ்ப்பாக்கம் பார்னபி சாலையில் தொடங்கப்பட்டுள்ளது. விருந் தோம்பல் துறையில் பன்னாட்டு அளவில் பயிற்சி பெற்று வேலை வாய்ப்பு பெற்று வந்த ஆற்றல் மிக்க இளைஞர்கள் லண்டன் பபுள் கோவின் சென்னை முதல் உணவக கிளையில் பணிபுரிகின் றனர் என "கோபுள் மீ குட்" நிறு வன தலைமை நிர்வாக அதிகாரி சவுராப் ராத்தேமார் தெரிவித்து உள்ளார். எல்.பி.சி.நிறுவனம் தற் போது வெற்றிகரமாக இந்தியா வில் ஒன்பது மய்யங்களை திறந்து உள்ளது. இந்த உணவகத்தை பண் டைய பாணியில் விக்டோரியன் தொடுதலின் குறிப்பைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner