எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சோவும், ரஜினியும்

சோவும், ரஜினியும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமல்ல, அவர்கள் இவருடைய அரசியல் சிந்தனையும், தேசிய, ஆன்மிக அடிப்படையில் அமைந்ததால், அவர்களுக்குள் பல வகைகளில் கருத்து ஒற்றுமை இருந்தது. அதனால் தான் சோ, துக்ளக்கில் இடைவிடாது கூறி வந்த கருத்துக்கள், தூத்துக்குடி சம்பவத்தில் ரஜினி கூறிய கருத்துக்களில் பொதிந்திருக்கின்றன. சோ எல்லாவிதமான அராஜகத் தையும் எதிர்த்தவர். போலீஸை மதித்தவர். உறுதியான தலைமை வேண்டும் என்று வலியுறுத்தியவர். போலீஸுக்கு மரியாதை இல்லையென்றால், நாட்டில் அமைதி நிலவாது, பொது ஒழுங்கு சீர் குலையும், அராஜகம் தலைவிரித்தாடும் என்று அவர் இடை விடாது அடித்துக் கூறி வந்தார். ஒரு உதாரணத்தை மட்டும் இங்கு நினைவு கூர்கிறோம்.

துக்ளக்கின் 32 - ஆவது (2002) ஆண்டு நிறைவு விழாவில் சோ, “போலீஸாருக்கு நிறைய அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். அவர்களைச் சந்தேகப் படுவதும், சமூக விரோதிகளைப் போல் பார்ப்பதும், பேசுவதும் சரியல்ல. மனிதனுக்கு உடல் பயம் இருக்க வேண்டும். அப்போதுதான் 100 - க்கு 99 பேர் ஒழுங் காக இருப்பார்கள். இதை தண்ட நீதி என்கிறோம். தண்டனைக்குத்தான் மனிதன் பயப்படுவான். அது தேவையில்லை என்றால், யார், என்ன வேண்டு மானாலும் செய்யலாம் என்றால், பிறகு அராஜகம்தான் நடக்கும். சமுதாயம் உருப்படாது. போலீஸ் மீது விசாரணை என்றால், பிறகு போலீஸாருக்கு வேலையில் என்ன ஆர்வம் இருக்கும்?’’ என்று பேசினார். எல்லாவற்றுக்கும் போராட்டம் என்ற வகையிலான அரசியலை சோ வன்மையாகக் கண்டித்து வந்தார். சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட உறுதியான தலைமை தேவை என்பதாலேயே அவர், ஜெயலலிதாவை ஆதரித்தார்.

இப்போதைய தமிழக அரசியல் சூழலில் சோ இருந்தால் என்ன எழுதியிருப்பாரோ, அதையேதான் ரஜினி பேசியிருக்கிறார். ரஜினியின் உறுதியான பேச்சு, பலருக்கு அவர் மீது இருக்கும் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் இருமடங்காக்கியிருக்கிறது.

துக்ளக், 13.6.2018, பக்கம் 3-4

ஓ அப்படியா? ஒரு சங்கதி. மறந்து விட்டதா? திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாளுக்கு.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் சங்கரராமன் கொலையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கைது செய்யப்பட்டாரே - போலீஸ் கைது செய்ததே. அதனை வரவேற்று துக்ளக்கில் எழுதினாரா திருவாளர் சோ.இராமசாமி?

இந்த விஷயத்தில் சங்கராச்சாரியாருக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று எழுதிடவில்லையா? அதற்கு குருமூர்த்தி அய்யர் பின்பாட்டுப் பாடவில்லையா? ஊருக்குத்தான் உபதேசமா? சூத்திரனுக்கு ஒரு நீதி. தண்டச்சோறுண்ணும் பார்ப்பானுக்கு ஒரு நீதி என்பது இதுதான் - தெரிந்து கொள்வீர்!

ஆனந்தகிருஷ்ணன்கள்

நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டிற்கு அவசியம் தேவை என்று முன்னாள் துணைவேந்தர் எம்.ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் பேட்டி (‘துக்ளக்‘ 13.6.2018 பக்கம் 18-21) வெளிவந்துள்ளது.

தகுதிகளையும், திறமைகளையும் இந்தக் கல்வி மேதாவிகள் மிகவும் தூக்கித்தான் பிடிக்கிறார்கள். அவர்கள் உயர்ந்துள்ள அளவுக்கு தம்மைச்சுற்றியுள்ள சமூகத்தையும் பார்க்கிறார்கள்.

இந்த நாட்டில் நம் கிராமங்கள் எப்படி இருக்கின்றன என்று இந்தக் கல்வியாளர்களுக்கு தெரியுமா? தந்தை பெரியார் கூறுவார்களே இதிலும் ஒரு வருணாசிரம முறை இருக்கிறதே. நகரம் என்றால் பிராமணத் தன்மையோடும், கிராமங்கள் என்றால் சூத்திரத் தன்மையோடும் தானே இருக்கின்றன.

கிராமங்களில் இருக்கும் பள்ளிக்கூடங்களின் நிலை என்ன? கட்டமைப்புகள்தான் எத்தகையவை? ஆசிரியர்களின் தன்மை கூட கற்றலில்,போதிப்பதில்  வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. பள்ளிகளில் நூலகம், லேபரட்டரி போன்ற வசதிகள் அங்கு எந்த நிலையில் உள்ளன? கழிப்பறை இல்லாத கிராமப் பள்ளிகள் கூட உண்டே!

அதே நேரத்தில் நகரங்களிலும், மாநகரங்களிலும் இந்த நிலை எப்படி இருக்கிறது?  ரோசரி மெட்ரிக் குலேசன் பள்ளியும், குப்ப சமுத்திரம் ஊராட்சி ஒன்றியப் பள்ளியையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாமா?

ஒரு முறை ஆனந்தகிருஷ்ணன் கிராமங்களுக்குச் சென்று பார்க்கட்டும், தமிழர்களில் உயர்ந்த நிலைக்கு செல்பவர்கள் நியோ பிராமின் ஆகிவிடுகிறார்கள். அவர்களுக்கான மேல்தட்டு மனப்பான்மைக்கு ஆளாகி விடுகிறார்கள்.

முதலில் கல்விக் கூடங்களின் கட்டமைப்புகளை சரிசமமாக உருவாக்க இந்தக் கல்வி மேதைகள் கருத்துக் கூறட்டும்.

பல தலைமுறைகளாக படித்தவர்களையும், முதல் தலைமுறையாக பள்ளிக்கூடப் படிக்கட்டுகளை மிதிப்ப வர்களையும் சமதட்டில் போட்டுப் பார்க்கும் மன சாட்சியற்ற மனுதர்ம புத்தியை கொஞ்சம் கீழே இறக்கிவிட்டு, மனித நேயத்துடன் வாய்ப்பு மறுக்கப் பட்ட மக்கள் மீது வரவேண்டும் என்று சமூகநீதி யுடன் திறந்த மனதோடு பிரச்சினைகளை ஆழமாக பார்க்கும் மனமில்லாதவர்கள்  ஒருவகையிலே நவீன மனுக்கள் தான் என்பதில் அய்யமே இல்லை.

கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது இதே ஆனந்த கிருஷ்ணன் தலைமையிலே தான் குழு ஒன்று போட்டு இவர்கள் அளித்த அறிக்கை யின் பேரில்தான்  நுழைவுத் தேர்வும் ஒழிக்கப்பட்டது.

இதுகுறித்து துக்ளக் பேட்டியில் இப்பொழுது இவர் என்ன சொல்லுகிறார் தெரியுமா?

“அந்தத் தவறுக்கு நானும் ஒரு காரணம் என்ற குற்ற உணர்ச்சி வருவதுண்டு” என்று கொஞ்சம் கூட கூச்ச உணர்ச்சியின்றி பேட்டியளித்துள்ளாரே. (இவர் களைத் தானே தேடிப்பிடித்து துக்ளக் பேட்டிகளை வெளியிடும்)

இவர்களைப் பற்றி என்ன சொல்லுவது!

‘நீட்’ தேர்வில் கூட சில கிராமங்களில் பயிற்சி மய் யங்கள் (சிளிகிசிபிமிழிநி சிணிழிஜிஸிணி) நடத்தப்பட்டுள்ளன. அங்கு படித்தவர்கள் எத்தனைப்பேர் ‘நீட்’ டில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். பிளஸ் 2 படிக்காமலே போதிய வருகைப் பதிவும் இல்லாமலேயே ‘நீட்’ தேர்வு எழுதி இந்தியாவில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறவர் பக்கம்தான் ஆனந்தகிருஷ்ணன்கள் நிற்பார்களா? அவர்களின் முதுகைத்தான் செல்லமாகத் தட்டு வார்களா?

நுழைவுத் தேர்வு இல்லாமல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படித்து டாக்டர் ஆனவர்கள் எல்லாம் மட்ட ரகமான வர்களா? தகுதி குறைந்தவர்களா? இடஒதுக்கீடு அடிப்படையில் படித்து டாக்டரானவர்கள் உலகில் பல நாடுகளிலும் புகழோச்சி நிற்கிறார்களே! இந்த உலகம் சுற்றும் ஆனந்தகிருஷ்ணன்கள் அந்த இடங் களில் எல்லாம் கண்களை இறுக மூடிக் கொள்வார்களா?

மருத்துவக் கல்லூரியில் கோல்டு மெடல் வாங்கி யவர்கள் தான் மருத்துவத்துறையிலும், மருத்துவத் தொண்டிலும் சாதனை படைத்திடுவார்கள் என்பதை நிரூபிக்க இந்த மேதை தயாரா? இந்தக் கேள்வியை நாம் இப்பொழுது வைக்க வில்லை - தந்தை பெரியார் அவர்கள் வாழும் போதே முன் வைத்தார்கள். ஆனால் இதுவரை பதில் தான் இல்லை.

ஆனந்தகிருஷ்ணன்களே,  அருள்கூர்ந்து ஆண் டாண்டு காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களின் குரல் வளையில் காலை வைத்து மிதிக்காதீர்கள்! 95 ஆண்டு காலம் இதை மீட்கப் பாடுபட்ட பெரியார் அவர்களுக்கு நன்றி செலுத்த மனம் வராவிட்டாலும் அவரை கொச்சைப் படுத்தாதீர்கள். மருத்துவக் கல்விலூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்த னையை உடைத்து எறிந்தவர் தந்தை பெரியாரும், நீதிக்கட்சி ஆட்சியும் அல்லவா! ஏறிய ஏணியை எட்டி உதைக்க வேண்டாம். அனிதாக்களின் சாவில் மகிழவும் வேண்டாம். துக்ளக், ஆனந்தவிகடன் பேட்டி வாங்கி போடுகிறது என்றால் எந்த நோக்கத்தில் என்பது கூடவா உங்களைப் போன்ற மேதைகளுக்கு தெரிய வில்லை?

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner