எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூன் 13 2018 - 2019ஆம் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட் டையன் வெளியிட்டுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்த கல்வியாண்டில் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார். அதன்படி, 10ஆம் வகுப்புக்கு மார்ச் 14 முதல் 29 வரையில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்றும், 11ஆம் வகுப்புகளுக்கு மார்ச் 6 முதல் 22 வரையிலும், 12ஆம் வகுப்புகளுக்கு மார்ச் 1ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவித்தார்.

திறன் பயிற்சி மேம்பாட்டு கருத்தரங்கம்

சென்னை, ஜூன் 13 இந்திய  திறன் பயிற்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சென்னையில் நிறுவன புதுமையான கண்டுபிடிப்பகள் என்ற தலைப்பில் 47ஆவது தேசிய கருத்தரங்கத்தை நடத்தியது. இந்த கருத்தரங்கத்தில் நிறுவனத்தில் தொடர் வளர்ச்சிக்கு புதுமையான கண்டுபிடிப்புகள் எவ்வாறு உதவுகின்றன என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

ரஞ்சன் குமார் மொஹபத்ரா, (இயக்குனர், இந்தியன் ஆயில் நிறுவனம்,)  47ஆவது தேசிய கருத்தரங்கத்தை துவக்கி வைத்தார். கார்த்திகேயன், இந்திய  திறன் பயிற்சி மற்றும் மேம்பாட்டு அமைப் பின் தலைவர் வினயசில் கவுதம்,  அய்.அய்.எம். கோழிக்கோடு இயக்குனர் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கில் டாக்டர் வினைசில் கவுதம்  மனிதவள மேம்பாட்டில் ஆரம்பகால கட்டம் பற்றி பேசினார், மனிதவள மேம்பாட்டில் புதுமை என்பது மனிதவள திட்டம், தகவல் பரிமாற்றம், மனித வள அலுவலக கணக்கு மற்றும் தணிக்கை, மனித வள மதிப்பீடு போன்ற அம்சங்களை கொண்டதாகும்.

மனித வள மேம்பாட்டில் புதுமை என்பது கலாச்சாரம், உயிரியல், உளவியல், சூழ்நிலை மற்றும் பொருளாதாரம் ஆகியவை மனித உறவுடன் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்று   கூறினார்.

ரஞ்சன் குமார் மொஹபத்ரா (இயக்குனர், இந்தியன் ஆயில் நிறுவனம்) அவரது தலைமை உரையில் “ சமையல் எரிவாயு நேரடி மானியம்  பற்றி பேசும் போது,ஒரு சிறிய யோசனை எவ்வாறு இந்திய பெண்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை உருவாக்கியது என்பது பற்றி விளக்கினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner