எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

லண்டன், ஜூன் 13- ஸ்பெயினுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தற்காப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தப்படும் என இந்திய மகளிர் ஆக்கி அணி தலைமை பயிற்சியாளர் ஜோயர்ட் மார்ஜின் தெரிவித்துள்ளார்.

வரும் ஜூலை 21 முதல் ஆக. 5-ஆம் தேதி வரை உலகக் கோப்பை மகளில் ஆக்கி போட்டி லண்டனில் நடைபெறுகிறது. இதற்கு தயாராகும் வகையில் ஸ்பெயின் அணியுடன் 5 ஆட் டங்கள் கொண்ட டெஸ்ட் தொட ரில் பங்கேற்கிறது. இதற்காக இந்திய வீராங்கனைகள் மாட் ரிட் சென்றுள்ளனர். பயிற்சியா ளர் மார்ஜின் கூறியதாவது:

ஆசிய வாகையர் கோப்பை போட்டியில் 1--0 என கொரியா விடம் தோல்வியடைந்தோம். அணியின் தற்காப்பு ஆட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும். இந்திய தாக்குதல் ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர். எளிதாக கோல்களை விட்டுத் தராத வகையில் தற் காப்பு ஆட்டமுறை மாற்றப் படும். ஸ்பெயின் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் கடு மையாக இருக்கும் என்றார் மார்ஜின்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner