எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஜூன் 13 கடந்த நிதியாண்டில், 1,329 அந்நிய நிதி நிர்வாக முதலீட்டாளர்கள், பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம் பதிவு செய்துள் ளனர்.

இது குறித்து இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய பங்குச் சந்தைகள், கடன் பத்திரங்கள் உள்ளிட்ட வற்றில் முதலீடு செய்வதற்காக, 2017-2018ஆம் நிதியாண்டில், புதிதாக, 1,329 அந்நிய நிதி நிர்வாக முதலீட்டாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

இது, முந்தைய, 2016  -2017 ஆம் நிதியாண்டில், 3,500 ஆக இருந்தது.

இதே காலத்தில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பில் பதிவு செய்துள்ள, மொத்த அந்நிய நிதி நிர்வாக முதலீட் டாளர்கள் எண்ணிக்கை, 1,329 அதிகரித்து, 7,807லிருந்து, 9,136 ஆக உயர்ந்துஉள்ளது.அந்நிய நிதி நிர்வாக முதலீட்டாளர்கள், இந்தியாவில், பல்வேறு நிறுவனங் களின் பங்குகளில், 25,600 கோடி ரூபாய்; கடன் பத்திரங்களில், 1.20 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு, 2014இல், அந்நிய முதலீடுகள் தொடர்பான பல்வேறு பிரிவுகளை ஒருங் கிணைத்து, அந்நிய நிதி நிர்வாக முதலீட்டாளர்கள் என்ற புதிய பிரிவின் கீழ் கொண்டு வந்தது.

அத்துடன், இந்நிறுவனங் களை, நிதியாதாரத்தின் அடிப் படையில், மூன்று பிரிவுகளாக பிரித்து, பதிவு செய்யும் நடை முறையை சுலபமாக்கியது.

பதிவு செய்த அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்கு, 1 - 5 ஆண்டுகள் உரிமம் வழங்கப் பட்டு வந்த நிலையில், தற்போது நிரந்தர உரிமம் வழங்கப்படுகிறது. இதனால், ந்நிய நிதி நிர்வாக முதலீட்டாளர்களுக்கு, காலவரை யின்றி முதலீடு செய்யும் வசதி கிடைத்துள்ளது.அத்துடன், இந்திய பங்குச் சந்தைககளின் ஏறுமுகமும், அந்நிய நிதி நிர்வாக முதலீட்டாளர்கள் பதிவை அதி கரித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner