எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பிரிட்டன், ஜூன் 13- பிரெக்ஸிட் மசோதா தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று (12.6.2018) நடைபெற்ற வாக் கெடுப்பில் பிரதமர் தெரஸா மே தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது.

முன்னதாக, அய்ரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முடிவை (பிரெக்ஸிட்), பொது வாக்கெடுப்பின் மூலம் பிரிட் டன் கடந்த 2016-இல் மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த டேவிட் கேமரூன் பதவி விலகினார். பின்னர், புதிய பிரதமராக தெரஸா மே பதவியேற்றார்.

இந்நிலையில், பிரெக்ஸிட் தொடர்பான மசோதாவில், அந்நாட்டின் நாடாளுமன்ற மேலவை ஒரு திருத்தத்தை கொண்டு வந்தது. அதன் மூலம், பிரெக்ஸிட் தொடர்பான பல்வேறு முடிவுகளை தன்னிச்சையாக எடுக்கும் அதிகாரம், பிரதமர் தெரஸா மேவிடம் இருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த திருத்தப்பட்ட மசோதா மீது கீழவை யில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், திருத்தப்பட்ட மசோதாவுக்கு எதிராக 324 வாக்குகள் கிடைத்தன. ஆனால், மசோதாவுக்கு ஆதரவாக 298 வாக்குகளே கிடைத்தன. இதன் மூலம் தெரஸா மே அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து, மசோதா மீண்டும் மேலவைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

பாகிஸ்தான் சிறுமி வன்கொடுமை வழக்கு: குற்றவாளியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

பாகிஸ்தான், ஜூன் 13- பாகிஸ்தானில் 7 வயது சிறுமியைக் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவரின் மேல் முறையீட்டு மனுவை அந்த நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதுகுறித்து, அந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள் ஆசிஃப் சயீத் கோஸா, மன்ஸுர் அகமது மாலிக், மன்ஸர் அலி ஷா அடங்கிய அமர்வு, சிறுமி கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள இம்ரான் அலி நக்ஷபந்திக்கு (23) பயங் கரவாதத் தடுப்பு நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உறுதி செய்தது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், கசூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 5-ஆம் தேதி மாயமான ஜைனப் அன்சாரி, நான்கு நாள்கள் கழத்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அந்தச் சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாகவும், சித்திரவதைக்குள் ளாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் பிரேத விசாரணையில் தெரிய வந்தது. இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சி அலையை ஏற் படுத்தியது.

காவல்துறையினரின் மெத்தனத்தைக் கண்டித்து அந்தப் பகுதியில் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆர்ப்பாட்டத்தின்போது போலீஸார் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

இந்த வழக்கில், அந்தச் சிறுமியின் வீட்டருகே வசித்து வந்த இம்ரான் அலி குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner