எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஜூன் 13 புழல் மத்திய சிறையில் இருந்து 8 பெண்கள் உள்பட 52 சிறை வாசிகள் விடுதலை செய்யப்பட் டனர்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழாவை யொட்டி, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் சிறைவாசி களை விடுதலை செய்ய வேண் டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அதன்படி, கடந்த 6-ஆம் தேதி 10ஆண்டுகளுக்கும் மேல் தண் டனை காலம் நிறைவு செய்துள்ள ஆயுள் தண்டனை சிறைவாசி களில் முதல் கட்டமாக 67 பேர் புழல் மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். 2-ஆம் கட்டமாக செவ்வாய்க் கிழமை (ஜூன் 12) 44 ஆண் சிறைவாசிகளும், பெண்கள் சிறையில் 8 பெண்கள் சிறை வாசிகளும் என 52 பேர் புழல் மத்திய சிறையில் இருந்து விடு தலை செய்யப்பட்டனர்.

அவர்களிடம் புழல் மத்திய சிறைத்துறை துணைத் தலை வரும், டி.அய்.ஜி.யுமான ஆ.முரு கேசன் பேசுகையில், குடும்பத் தினரையும், உறவினர்களையும் பிரிந்து வாழ்ந்த அனுபவத்தை மனதில் கொண்டு, மீண்டும் தவறுகளில் ஈடுபடாமல் கோபத்தை, விட்டுவிட்டு பொறு மையைக் கடைப்பிடித்து வாழ்க் கையில் சிறந்து விளங்க வேண் டும். சிறை வளாகத்தில் பயின்ற தொழிற்பயிற்சி முறைகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன் னேற வேண்டும் என அறிவு றுத்தினார்.

மேலும், விடுதலையான ஆண் சிறைவாசிகளுக்கு மர வேலை செய்யும் பொருள்கள், இஸ்திரி பெட்டி, பிளம்பிங் மற்றும் மின்சாதன பழுது நீக்கத்துக்கு தேவையான பொருள்கள் ஆகியவற்றையும், பெண் சிறைவாசிகளுக்கு இட்லி கடை வைத்து நடத்துவதற்கான உபகரணங்கள், தையல் தொழி லுக்கான உபகரணங்கள் ஆகிய வற்றையும் வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, சிறைக் கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

மேலும் இதேபோல், திருச்சி, சேலம், பாளையங்கோட்டை ஆகிய சிறைகளில் 16 பேர் உள்பட தமிழக சிறைகளில் மொத்தம் 68 பேர் விடுதலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner