எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஜூன் 13 தூத்துக்குடியில் காவல்துறையினர் தற் போதும் இளைஞர்களை, பெண்களை வீடு வீடாகப் புகுந்து தேடி அடிக்கின் றனர்.  அதிமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பினால்தான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அதற்குரிய காலம் வந்து விட்டது என கனிமொழி எம்பி கூறினார்.  திமுக எம்பி கனிமொழி மதுரையில் இருந்து நேற்று காலை 9 மணி விமானத்தில் சென்னை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

தூத்துக்குடியில் காவல்துறை வன்முறை என்பது தற்போதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அங்குள்ள பெண்களை, இளைஞர்களை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறார்கள். தமிழக அரசு நாங்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டோம். இப்போது இயல்பு நிலைக்கு வந்து விட்டது என்று அறிவித்தாலும் இன்னும் அங்கு இயல்பு நிலை திரும்பவில்லை.  வீடு, வீடாக காவல்துறையினர்  சென்று, இளைஞர்களை பிடித்து அடித்து உதைப் பது தொடர்கிறது. அதோடு மட்டுமின்றி போராட்டம் நடத்தியவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தங்களுடைய சுற்றுப்புற சூழல் பாதுகாப்புக்காக போராட்டம் நடத்திய மக்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய வேண்டிய அவசியம் என்ன?. இதேபோல் மக்களை தொடர்ந்து பலிவாங்கும் ஒரு அரசாக தமிழக அரசு மாறி விட்டது. முதலில் இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பினால்தான் தூத்துக்குடி மக்கள், தமிழக மக்கள் நிம்மதியாக வாழமுடியும். அதற்குரிய காலம் வந்து விட்டது என்றார்.

ஜாக்டோ -ஜியோ அமைப்பினர்

2 -ஆவது நாளாக பட்டினிப் போராட்டம்

சென்னை, ஜூன் 13  பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் 2 -ஆவது நாளாக செவ்வாய்க் கிழமை உண்ணா நிலைப் போராட்டம் தொடர்ந்தது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட் டங்கள் நடத்தி வந்தனர். இக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம், இந்த அமைப்பினர் வேலை நிறுத்தம், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஊதிய முரண் பாடு தொடர்பாக குழு அமைத்து புதிய சமரச திட்டத்தை செயல் படுத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் குழுவின் பரிந்துரையை இதுவரை அரசு வெளியிட வில்லை. இதையடுத்து, திட்ட மிட்டப்படி சென்னை சேப்பாக் கத்தில் திங்கள்கிழமை உண்ணா நிலைப் போராட்டத்தை ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் தொடங் கினர். இதில் ஜாக்டோ- ஜியோ ஒருங் கிணைப்பாளர்கள் மற்றும் உயர் மட்டக்குழு நிர்வாகிகள் கால வரையற்ற பட்டினிப் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண் டாவது நாளாக செவ்வாய்க் கிழமையும் அவர்களின் போராட் டம் தொடர்ந்தது. தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடமாட் டோம் என அவர்கள் உறுதியாக தெரிவித்தனர். இந்த பட்டினிப் போராட்டத்தில் தற்போது 50 பெண்கள் உள்பட 250 நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

மு.க.ஸ்டாலின் சந்திப்பு: இதனிடையே, பட்டினிப் போ ராட்டத்தில் இருந்து வரும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை, திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினார். அப்போது அவர், உடலை வருத்தி பட்டினிப் போராட்டத்தைத் தவிர்க்கக் கேட்டுக் கொள்ள வேண்டு மெனவும், இதுகுறித்து சட்டப் பேரவையில் குரல் எழுப் பப்படும்‘ எனவும் ஒருங்கிணைப் பாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner