எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உள்ளிக்கோட்டை, ஏப்.13, விவசாய முதல் அமைச்சர் என்று எடப்பாடி  பழனிச் சாமி தன்னை சொல்லி கொள்ளுகிறார். ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானவை என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் அவர்களை ஆதரித்து, திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

பட்டுக்கோட்டை மாவட்ட  திராவிடர் கழக தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் தலைமை வகித்தார். மன்னை ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வம் வரவேற்றார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தனது உரையில்,

உள்ளிக்கோட்டைப் பகுதியில் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கே வந்து பேசுகிறேன்.இந்த பகுதியிலே பிறந்து வளர்ந்து சிங்கப்பூரில் இயக்கத் திற்கு அடித் தளம் அமைத்த சு.தெ.மூர்த்தி, உள்ளிக் கோட்டை பக்கிரிசாமி, அருணாசலம் போன்ற வர்களை நினைத்துப் பார்க் கிறோம்.

அதேபோல தி.மு.க. தலைவர் முத் தமிழறிஞர் அவர்களின் சாதனைகளில் ஒன்றான சேது சமுத்திர திட்டம் கழகத் தோழர் டி.ஆர்.பாலு அவர்களின் முயற்சி யால் நிறைவேற வேண்டிய நேரத்தில் மூடநம்பிக்கையால் ராமன் பாலம் என்று கூறி முட்டுக்கட்டை போட்டார்களே!

அந்த திட்டம் நிறைவேறி இருந்தால் கோடிக்கணக்காண பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும்.அனைத்தையும் தடுத்து விட்டார்கள்.விரைவில் இந்த மோடி அரசு வீட்டுக்கு அனுப்பியாக வேண்டும்.

இங்கே உள்ள அரசு ஆட்சி கொத் தடிமை ஆட்சியாக உள்ளது. இந்த முதல் வர் விவசாய முதல்வர் என்று சொல்லி கொள்கிறாரே, காவிரி நீர் பிரச்சினையில் என்ன செய்தீர்கள்? துரோகம் இழைத் துள்ளார்களே,   மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்கிறார்களே, தமிழ்நாடு அரசு என்ன செய்யும்? அங்கு அணைக் கட்ட மத்திய சுற்றுச் சூழல் துறை துணை போகிறதே. அந்த மோடிதானே அதிமுக வுடன் கூட்டு. இந்த நிலையில் தன்னை விவசாய முதல்வர் என்பது சரியானதுதானா?

நாளுக்கு நாள் தோல்வி முகம் தெரிகிறது. கஜா புயல் பாதிப்பின் போது இங்கே வந்தாரா?. அல்லது நாடாளுமன்றத்திலாவது பேசினாரா? தென்னை விவசாயிகள் அடியோடு பாதிக்கப் பட்டுள்ளார்களே!

இன்னும் நிவாரணம் சரியாக கிடைக்க வில்லையே! இங்கே புயல், வடக்கு மாவட்டத்தில் எட்டு வழிச்சாலை திட்டம் என்று அடித்தட்டு மக்களை வஞ்சித்தாரே? நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததே, சொரணை உள்ள அரசாக இருந்தால் ராஜினாமா செய்து இருக்க வேண்டாமா? மோடி அரசினாலே சி.பி.அய். ஏவப்படு கிறது. பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் 32இடங்களில் மோடியின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதுதான் சாதனையா? எனவே, இப்படிப்பட்ட ஆட்சியாளர்கள் தோற் கடிக்கப்பட வேண்டும். இந்த தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தி.மு.க.வேட்பாளர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பரப்புரை கூட்டத்தில் மாநில விவசாய அணி செயலாளர் ரா.கோபால், மாவட்ட செயலாளர் பெ.வீரையன், மன்னை நகர செயலாளர் மு.ராமதாசு, மன்னை நகர தலைவர் அர்.எஸ்.அன்பழகன், நீடாமங் கலம் நகர தலைவர் அமிர்தராஜ், தி.மு.க.தலைமை செயற்குழு உறுப்பினர் தலையாமங்கலம் பாலு, மேனாள் ஒன்றிய பெருந்தலைவர் தென்னவன், மேனாள் மாவட்ட துணை செயலாளர் முத்துவேல், மேனாள் ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி, தி.மு.க.ஒன்றிய செயலாளர் தன்ராஜ், மாவட்ட பிரதிநிதி பரவை கிரி,  காங்கிரசு கட்சி நகர தலைவர் கனகவேல், மன்னை வட்ட தலைவர் செல்வராஜ், சி.பி.அய். மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் மகேந்திரன், சி.பி.எம். ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர் கந்தசாமி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், மன்னை ஒன்றிய செயலாளர் மாசிலாமணி, கோட்டூர் ஒன்றிய செயலாளர் சிவா.கதிரவன், வி.சி.க.மாநில துணை செய லாளர் இரமணி, தஞ்சை மாவட்ட தி.க.துணை தலைவர் முத்து.ராஜேந்திரன், மாவட்ட இணை செயலாளர் ஞான.சிகாமணி, மாநில ப.க.தலைவர் மா.அழகிரிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் அல்லிராணி, மணியன், தலைமை கழக பேச்சாளர்கள் இராம. அன்பழகன், சிங்காரவேலு, மாவட்ட இளைஞரணி தலைவர் வீரத்தமிழன், நீடா மங்கல ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், கோட்டூர் ஒன்றிய செயலாளர் புஷ்பநாதன், பெரியார் பெருந்தொண்டர் வெ.குமாரசாமி, உள்ளிக்கோட்டை நகர தலைவர் க.ராஜேந் திரன், ப.க.தோழர் இன்பக்கடல், சிவா.வணங்காமுடி, செய்தியாளர் மன்னை சித்து உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மன்னை ஒன்றிய செயலாளர் செல்வராசு நன்றி கூறினார்.

மோடிக்குப் பெரியார் நூல்

ராகுல் அறிவுரை

தேனியில் நடந்த பரப்புரை கூட்டத்தில் காங்கிரசு கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசும்போது பிரதமர் மோடி அவர்களுக்கு இரண்டு நூல்களைப் பரிசு தர விரும்புகிறேன்.ஒன்று தந்தை பெரியார் பற்றிய புத்தகம்.மற்றொன்று முத்தமிழறிஞர் கலைஞர் பற்றிய புத்தகம் என்று

பேசியிருக்கிறார் என்றால் பெரியாரும் கலைஞரும் இந்தியா முழுவதற்கும்  தேவைப்படுகிறார்கள் என்றுதானே பொருள்.

இந்தியா அமைதியாக இருப்பதற்கு பெரியார் தேவை என்பதுதானே அர்த்தம்.

- உள்ளிக்கோட்டை தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தமிழர் தலைவர்

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner