எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சைக்கு வாருங்கள் தோழர்களே

தன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்!

பேரணியில் பங்கேற்பீர் தீரர்களே!

பெரியாரின் பீரங்கி முழங்கிடுமே!

தலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள்

தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்!

கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்!

கருஞ்சட்டைச் சேனையில் சேருங்களேன்!

கலை நிகழ்ச்சி விருந்துக்குப் பஞ்சமில்லை

காதுக்கும் கண்ணுக்கும் கற்கண்டுதான்

பகுத்தறிவுதான் மனிதனுக் கழகுயென்றால்

பாடம் கேட்கலாம் பகுத்தறிவாளர்களால்

சிந்தனையைத் தீட்டிக் கொள்ள வேண்டும் - சீழ்

மதத்தை நெட்டித் தள்ளவேண்டும்

பஞ்சமில்லை தோழர்களே, மிக்கவுண்டு

பண்பட்ட பேச்சாம் மழையுமுண்டு

தொண்டுக்கு முன்னுரிமை கழகத்தில் - இதன்

கொள்கைக்கு நிகரில்லை உலகத்தில்!

தன்னல மறுப்பென்னும் தியாகமே

கழகத் தோழரின் ரத்த ஓட்டமே!

மதவாத யானையை விரட்டிடுவோம்

மனிதநேய மாண்பினைக் காத்திடுவோம்

காவி நோய்க்கு இங்கு என்ன வேலை?

கருஞ்சட்டை ஒழித்திடும் முதல் வேலை!

கிடைத்திருக்கும் சந்தர்ப்பமாம் இந்த வேளை

கிடைச் சிங்கம் எய்திடுமே - கொள்கை வேலை!

தந்தை பெரியார் பணி முடிக்க வாருங்களேன்

தனி வரலாறு படைப்போம் கூடுங்களேன்

தமிழினத் தலைவர் அழைக்கிறார், அழைக்கிறார்!

தஞ்சையாம் மக்கள் கடலில் சங்கமிப்பீர் தமிழர்களே!

- கவிஞர் கலி.பூங்குன்றன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner