எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, ஜன.11- திருச்சி பெரியார் தொடக்கப்பள்ளியில் பொங்கல்விழா ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக கொண் டாடப்பட்டு வருவது வழக்கம். அதன்படி இவ்வாண்டும்  பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் பெரியார் தொடக்கப்பள்ளி தாளாளரும், மாவட்ட தலைவருமான ஞா.ஆரோக்கியராஜ் பள்ளிக் குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல், கரும்பு உள்ளிட்டவற்றை வழங்கினார்.  இதில் தலைமைக்கழக பேச்சாளரும், பெரியார் சிந்தனை உயராய்வு மய்ய இயக்குநருமான முனைவர் அதிரடி க.அன்பழகன், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை விஜய லட்சுமி, மண்டல செயலாளர் ப.ஆல்பர்ட், மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ், அந்தநல்லூர் ஒன்றிய தலைவர் மாவடியான், துவாக்குடி நகர செயலாளர் விடுதலை கிருஷ்ணன், ஆட்டோ பழனி, சாமி கைவல்யம் முதியோர் இல்லத் தோழர்கள் மற்றும் பள்ளி ஆசிரியைகள் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner