எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோலாலம்பூர், டிச.5  கோலாலம்பூர்  நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மந்தின் நகரில்  அமைந்துள்ள கெய்ரோ தமிழ்ப் பள்ளியில் பெரியார் நூலகம் சமீபத்தில் திறப்பு விழா கண்டது. மேலும் பத்து நூலகங்கள் அமைக்கப்படும். இந்த பள்ளிக்கூடம் 1928இல் நிறுவப் பட்டது. சுமார் 200 மாணவ - மாணவியர் இப்பள்ளியில் பயில்கிறார்கள்.

தலைமை ஆசிரியர் டி.ஆர். காளிமுத்து, துணைத் தலைமை ஆசிரியை கோவி. தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியார் நூலகம் திறக்கப்படுவது ஒரு வரலாற்று பூர்வமான நிகழ்வு என தலைமை ஆசிரியர் தமதுரையில் கூறினார்.

திராவிட இயக்க பணியாளரும், தோட்ட தொழில் துறை ஆலோசகருமான மு.கோவிந்தசாமி நூலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இனத்திற்கும், மொழிக்கும் பெரியார் ஆற்றிய பணிகளை நினைவு படுத்தினார்.

இந்த நிகழ்வில் பெரியார் பெருந்தொண்டர்கள் கோ. ஆவுடையார், தீப்பொறி வே. நடராசன், சுப்பிர மணியம், கு. கிருட்டிணன், பள்ளியின் வாரிய தலை வர் மணி மாறன் மற்றும் பல பொறுப்பாளர்கள், மதிகமந்தின் கிளை பொறுப்பாளர்கள், பெற்றோர் கள், ஆசிரிய பெருமக்கள், மாணவர்கள், 300க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர். மாணவர் களுக்கு பெரியார் பிஞ்சு இதழ்கள், பழங்கள், சுவைபானங்கள் வழங்கப்பட்டன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner