எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, செப்.14 திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேனிலைப் பள்ளி வளாகத்திலுள்ள என்.எஸ்.கே.கலைவாணர் அரங்கில் மழலையர் பிரிவு முதல் இரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பாட்டி  - தாத்தா தினக் கொண்டாட்டம் செப்.8 ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற்றது.

மொழி வாழ்த்துடன் விழா தொடங் கியது. பள்ளி முதல்வர் க.வனிதா வரவேற் புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கே.கே.நகர் கிளையின் துணை மேலாளர் எஸ்.அபிநயா  கலந்து கொண்டார்.

அதைத் தொடர்ந்து எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர்களின் நடனம், பாடல், திருக்குறள், ஆத்திச்சூடி ஒப்புவித்தல், கவிதை, பொது அறிவு உள்ளிட்ட பல்திறன் திறமைகளை வெளிப்படுத்தி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களின் மாநிலங்களின் கலாச்சார நடனம், பல்திறன் நிகழ்ச்சிகள், வில்லுப்பாட்டு, கிராமிய, மேற்கத்திய நடனங்கள் பார்வை யாளர்களை பெரிதும் கவர்ந்தன. மேலும்  விழாவிற்கு வருகை புரிந்த பாட்டி, தாத் தாக்களுக்கு அவரவர் பேரக் குழந்தைகளின் கரங்களால் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கியது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து தாத்தா, பாட்டி களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று, முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு  வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டன.    பின்னர் சிறப்பு விருந்தினர் எஸ்.அபிநயா பேசும்போது, இன்றைய காலகட்டத்தில் பாட்டி, தாத்தா போன்ற உறவுகள் தான் சமுதாயத்திற்கு மிகவும் அவசியமானது. அவர்கள் வழியில் நடப் பதுதான் வெற்றியை தரும். எந்தவித சூழ லையும் சமாளிப்பதற்காக துணிவையும், திறமையையும் அவர்களிடமிருந்து இன்றைய இளைய தலைமுறை கற்று கொள்ள வேண்டும்.   குடும்ப உறவுகள் சுருங்கி விட்ட இன்றைய காலக் கட்டத்தில் உறவுகளின் உன்னதத்தை விளக்கும் வகையில், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிர்வாகத்தை பாராட்டுகிறேன் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் ஒன்று மற்றும் இரண் டாம் வகுப்பு மாணவர்கள் நடித்த நாடகம் பார்வையாளர்களை நெகிழ்ச்சியை ஏற் படுத்தியது.

முன்னதாக சிறப்பு விருந்தினர் எஸ்.அபிநயாவிற்கு பள்ளி முதல்வர் க.வனிதா பயனாடையும்,நினைவு பரிசினையும் வழங்கினார். நிறைவாக நிகழ்ச்சி ஒருங் கிணைப்பாளர் செந்தில் லதா நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner