எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குமாரகுடி, ஜூலை 5 சிதம்பரம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் 26.6.2018 அன்று மாலை 6 மணிக்கு குமாரகுடி பெரியார் தாசன் இல்லத்தில் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் தலை மையில் நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவர் மழவை கோவி.பெரியார்தாசன், கழகப்பேச்சாளர் யாழ்.திலீபன் ஆகியோர் முன்னிலை யேற்றனர். மண்டல மாணவரணி செயலர் ச.வீரமணி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் திருமுட்டம் ஒன்றிய தலைவர் பெரியண்ணசாமி, காட்டுமன்னார் குடி ஒன்றியத் தலைவர் செல்வகணபதி, மாவட்ட ப.க.அமைப்பாளர் பூ.வே.அசோக் குமார், கொழை கிளைத் தலைவர் இராச சேகரன், மன்னார்குடி நகரத்தலைவர் இரா.பொய்யாமொழி, ஆண்டிபாளையம் தலைவர் ப.முருகன், மகளிரணி மாவட்ட தலைவர் சுமதி பெரியார்தாசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

தீர்மானங்கள்: 1) குடந்தையில் நடைபெறவுள்ள திராவிடர் மாணவர் கழக மாநாட்டிற்கு திரளாக மாணவர்களை அழைத்துக்கொண்டு தனி பேருந்தில் செல்வதென தீர்மானிக்கப்பட்டது.

2) மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு, புவனகிரி, குமாரகுடி, சோழத்தரம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், குமராட்சி, அறந்தாங்கி ஆகிய இடங்களில் சுவரெ ழுத்து எழுதுவது எனத்தீர்மானிக்கப்பட்டது.

இறுதியில் மண்டல மாணவர் கழக தலைவர் ச.வீரமணி நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner