எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 2 பகுத்தறிவாளர் கழகம், தென் சென்னை மாவட்டம் மற்றும் ப. க. கல்லூரி/பல்கலைக்கழக ஆசிரியர் அணி (சென்னை) இணைந்து நடத்திய கலந்துரையாடல் கூட்டம், 24.6.2018 அன்று காலை 10.30 மணியள வில், சென்னை, பெரியார் திடலில் நடைபெற்றது.

தென் சென்னை ப.க. தலைவர் மு.இரா.மாணிக்கம் அனைவரையும் வர வேற்றார். பொதுச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் தன் சிறப்புரையில் பேசியதாவது:

பகுத்தறிவாளர் கழகத்திற்கு  உறுப்பி னர்கள் சேர்க்க அனைத்து பொறுப் பாளர்களின் பங்கும் உள்ளது. முதலில், மாவட்டத்திற்கு, 30 உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும்.  உறுப்பினர்களை  சேர்க்க அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மாதம் ஒரு முறை கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்த கலந்துரையாடல் கூட்டம், சில மாதங் களுக்கு, தென் சென்னை மாவட்டமும், பல்கலைக்கழகம் கல்லூரி ஆசிரியர் அணியினர் இணைந்து நடத்தலாம். இவ்வாறு   பேசினார்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

1) ஒவ்வொரு மாதமும், மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடத்துவது.

2) சில மாதங்களுக்கு, ப.க. தென் சென்னை மாவட்டமும், கல்லூரி/பல் கலைக்கழக ஆசிரியர் அணியினர் இணைந்து நடத்துவது.

ப.க.கல்லூரி/பல்கலை. ஆசிரியரணி மாநில அமைப்பாளர் பேரா. டாக்டர் சிறீ.அருட்செல்வன் பேசியதாவது: பல் கலைக்கழக ஆசிரியர்கள், பேராசிரியர் களிடம் பேசி, அவர்களின் திராவிட இயக்க கொள்கைகளின் மீது உள்ள ஈடுபாடு தெரிந்து, அவர்களை உறுப்பினர் களாக்க வேண்டும் என்று கூறினார்.  இறுதியாக, மாவட்ட செயலாளர் ந.இராஜராஜன் நன்றி தெரிவித்தார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner