எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கிருட்டினகிரி கலந்துரையாடலில் தீர்மானம்

கிருட்டிணகிரி, ஜூன் 14- கிருட்டி ணகிரி மாவட்டம் திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் கிருட்டிணகிரி விடு தலை வாசகர் தலைவர் நாரா யணமூர்த்தி அலுவலகத்தில் 10.6.2018 அன்று மாலை நடை பெற்றது.

இக்கூட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் மு. துக்காராம், மாவட்ட இணைச் செயலாளர் சு.வனவேந்தன் முன்னிலை வைத்தனர்.

திராவிட மாணவர் கழக மாவட்ட தலைவர் க.கா.வெற்றி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் கதிர வன் கடவுள் மறுப்பு கூறினார். கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் மாவட்ட மாணவர் கழக செயலாளர் அஜித் வரவேற்று பேசினார்.

கூட்டத்தின் தலைவர் வெற்றி தனது உரையில்:_ குடந்தையில் ஆகஸ்ட் 8இல் நடைபெற உள்ள பவள விழா மாணவர் கழக மாநாட்டிற்கு கிருட்டிணகிரி மாவட்டத்தில் இருந்து மாணவர்கள் தனி வாகனம் வைத்து 100 மாண வர்களுடன் கலந்து கொள்ள வேண்டும். மாநாடு குறித்து நன்கு விளம்பரம் செய்தல் வேண்டும் இதை குறித்து வந்திருந்த அனைவரும் கருத்து சொல்ல கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து கிருட்டிணகிரி நகர தலைவர் க.மாணிக்கம், ஒன்றிய செயலாளர் வேலன், காவேரிப்பட்டணம் ஒன்றிய தலைவர் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி தலைவர் ஆறு முகம், செயலாளர் புகழேந்தி, மாவட்ட ப.க. தலைவர் லூயிஸ்ராஜ், கவுண்டப்பனூர் கிளை தலைவர் செல்வம் விடு தலை வாசகர் வட்ட தலைவர் வெ.நாராயணமூர்த்தி, மாண வர் அணி செயலாளர் அஜித், திருப்பத்தூர் மாவட்ட மாண வர் அணி அமைப்பாளர் மணி மொழி, கிருட்டிணகிரி அரசு கல்லூரி மாணவர் அணி அமைப்பாளர் பெ.ஆசிபா, மு. சந்தோஷ்குமார், காவேரிப்பட் டணம் மாணவர் கழக அமைப் பாளர் மணிமேகலை, மாவட்ட திராவிடர் கழக இணைச் செய லாளர் சு.வனவேந்தன், மாவட்ட தலைவர் மு.துக்காராம் ஆகி யோர் வழிகாட்டுதல் உரைக்கு பின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில ப.க. துணைத் தலைவர் அண்ணன் சரவணன் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தின் முடிவில் மாண வர் அணி சார்பாக கிருட்டி ணகிரி மாவட்டத்தில் இருந்து குடந்தையில் நடைபெற உள்ள மாணவர் கழக பவள விழா மாநாட்டிற்கு மாவட்ட திரா விடர் கழகம் பேருந்து வசதி ஏற்பாடுசெய்து தர வேண்டும் என மாணவர் கழகம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

கழக குடும்பங்கள் அல்லா மல் மாணவர் 50 பேருடன் மாநாட்டில் கலந்து கொள்வது என முடிவ செய்யப்பட்டது. இறுதியாக கிருட்டிணகிரி நகர இளைஞரணி அமைப்பாளர் தமிழ்மலை நன்றி கூறினார்.

திராவிட மாணவர் கழக கிருட்டிணகிரி மாவட்ட பொறுப்பாளர்கள் தலைவர் வெற்றி, செயலாளர் அஜித் குமார், அமைப்பாளர்கள் கதிர வன், மணிமேகலை, ஆசிபா, சந்தோஷ்குமார், தமிழ்மணி மற்றும் 10ஆம் வகுப்பு பொது தேர்வில் மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் கதிரவன், அதிக மதிப்பெண் பெற்றமைக்காக வும், அனைவருக்கும் கிருட்டி ணகிரி நகர கழகம் சார்பில் பயனாடை அணிவித்து பாராட் டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு கொடுத்தவரும் நகரகழக செய லாளரும் விடுதலை வாசகர் வட்ட செயலாளருமான க.மாணிக்கம் அவர்களுக்கு மாண வர் கழகம் சார்பில் பாராட்டு களுடன் நன்றி தெரிவிக்கப் பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner