எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆலங்குடி, ஜூன் 4- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி என்.டி.சி. கல்வியகத்தில் 24.5.2018 அன்று மாலை 4 மணிக்கு திராவிட மாணவர்கள் சந் திப்போம் சிந்திப்போம் எனும் சிறப் புக் கூட்டம் எழுச்சியோடு நடைபெற்றது.

அனைவரையும் வரவேற்று கல்வி யகத்தின் முதல்வர் சசிகுமார் உரை யாற்றினார். மண்டல தலைவர் பெ.இராவணன், மாவட்ட ப.க. தலைவர் ஆசிரியர் அ.தர்மசேகர் ஆகியோர் அறி முக உரையாற்றினர்.

திராவிடர் கழக அமைப்பாளர் உரத் தநாடு இரா.குணசேகரன் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கொள்கை சிறப்பினையும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அரும்பெரும் உழைப்பினையும், மாணவர்கள் திரா விட மாணவர் கழகத்தில் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியத்தையும் விளக்கி சிறப்புரையாற்றினார். மாண வர்கள் தந்தை பெரியாரை எந்தவித கோணத்தில் பிடித்திருக்கிறது, ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மகிழ் வோடு தெரிவித்து சிறப்பிற்குரிய ஒன் றாக அமைந்திருந்தது. திராவிட மாண வர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், மாவட்ட செயலாளர் க.மாரிமுத்து, மண்டல இளைஞரணி செயலாளர் க.வீரையன், கழகப் பேச்சாளர் சுப.மணியரசன், புதுக் கோட்டை கழக செயலாளர் இளங்கோ, கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தார்கள். திருச்சி சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளராக த.சங் கவிதர்மா நியமிக்கப்பட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner